பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

காற்றில் வந்த கவிதை

இந்த உயர்ந்த கருத்தை அந்த நாடோடிப் பாடல் எடுத்துக் கூறுகிறது.

பாட்டு மேலும் கேட்கிறது. யாரோ பாடுகிரு.ர்கள். பழநி மலையின்மீது ஏறுகின்ற ஒருவன்தான் பாடுகிருன். ஆனால் அந்தப் பாடலை யார் முதலில் பாடிஞர்களோ தெரியாது. பழநி மலை அந்தப் பாடலைப் பெற்றிருக்கிறது என்று வேண்டுமானல் கூறலாம். ஏனென்ருல் அந்தப் பாடல் பழநி மலைக்கு அப்படிச் சொந்தமாகிவிட்டது.

எருக்கிலைக்குத் தண்ணீர்கட்டி
      எத்தனைபூப் பூத்தாலும்
மருக்கொழுந்து வாசமுண்டோ
      மலைப்பழநி வேலவனே

பெரியதோர் உண்மையை வெளியிடுகின்ற பாட்டு இது. எருக்கஞ் செடியைப் பயிரிட்டு அதற்குத் தண்ணிர் பாய்ச்சி என்ன பயன் கிடைக்கப் போகிறது? அது பூக்கின்ற மலர்களுக்கு மருக்கொழுந்தின் மணம் இருக்குமா? பயனில்லாத காரியத்தில் காலத்தைச் செலவழிப்பதால் வாழ்க்கை வீணுகிறது. எருக்கைப் பயிரிடுகின்ற நேரத்தில் மருக்கொழுந்தைப் பயிரிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரண்டு முயற்சிகளுக்கும் சிரமம் ஒன்றுதான். காலச் செலவும் வேறுபடாது. ஆனால், பலன் நிச்சயமாக வேறுபடுகிறது. ஆதலால், நல்ல பயனுடைய செயலிலேயே நாம் நமது வாழ்க்கையைச் செல விடவேண்டும் என்று இப்பாடல் குறிப்பாக உணர்த்துகிறது.

பழநி மலையிலே ஏறுகின்ற அடியவர்களில் இல்லறத்தார் உண்டு. துறவறத்தைக் கைக்கொண்டவர்களும் உண்டு. ஒரு துறவி பாடிக்கொண்டே மலையின்மீது அடியெடுத்து வைக்கிறான்.