இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஏலேலோ ஐலசா
77
உள்ளத்தைக் கவரக் கூடியது. அந்த இசையில் மக்கள் உடற் சிரமத்தையும் அலுப்பையும் மறக்கிறார்கள்.
இன்னும் ஒரு பாடலைப் பார்ப்போம்:
மண்ணை நம்பி-ஏலேலோ
மர மிருக்க-ஐலசா
மரத்தை நம்பி-ஏலேலோ
கிளையிருக்க-ஐலசா
கிளையை நம்பி-ஏலேலோ
இலையிருக்க-ஐலசா
இலையை நம்பி-ஏலேலோ
பூவிருக்க-ஐலசா
பூவை நம்பி-ஏலேலோ
பிஞ்சிருக்க-ஐலசா
பிஞ்சை நம்பி-ஏலேலோ
காயிருக்க-ஐலசா
காயை நம்பி-ஏலேலோ
பழமிருக்க-ஐலசா
பழத்தை நம்பி-ஏலேலோ
நீ யிருக்க-ஐலசா
உன்னை நம்பி-ஏலேலோ
நானிருக்கேன்-ஐலசா