பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

காற்றில் வந்த கவிதை

குன்றுடையான் கதை

குன்றுடையான் கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? கொங்கு நாட்டுக் கிராமங்களுக்குச் சென்றால் இந்தக் கதையைக் கேட்கலாம். இது ஒரு நீண்ட கதை. இரண்டுபேர் எதிர் எதிராக அமர்ந்து உடுக்கையடித்துக் கொண்டு குன்றுடையான் கதையைப் பாட்டாகவே பாடுவார்கள். இடையிடையே வசனத்தில் விளக்கமும் வரும். ஆனால், கதை பெரும்பாலும் பாட்டாகவே நீளும். இதை அண்ணன்மார் கதை என்று சொல்லுவார்கள். பெரியண்ணன், சின்னண்ணன் என்ற இரண்டு சகோதரர்களின் வீர வரலாற்றையும், அவர்கள் செய்த போர்களைப் பற்றியும் இந்தக் கதையிலே கேட்கலாம். குன்றுடையான் இவர்களின் தந்தை. இரவு நேரங்களிலே கதை நடக்கும். ஒரு நாள் இரண்டு நாட்களில் முடிந்துவிடாது. மாதக் கணக்கிலே இது தொடரும். பாட்டுப் பாடுபவர்களுக்குத் தானியமாகவும் பணமாகவும் நல்ல வரும்படி கிடைக்கும். கொங்கு நாட்டு வேளாளர்கள் இக்கதையைத் தங்கள் இனத்தின் வரலாறாகவே கருதுகிறார்கள். கொங்கு நாட்டிற்கு