பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாட்டுக்காரன் பாட்டு 7 நாட்டுப்புறத்திலே அந்தப்பாடலைக் கேட்கலாம். கழனி களிலே கேட்கலாம். கபடமறியாத மக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அதைக் கேட்கலாம். அப்படிப்பட்ட ஒரு வெள்ளைப் பாடலைத்தான் இந்த மாலை நேரத்திலே நான் கேட்டேன். பாடுகின்றவன் ஒரு இடைப் பையன். மாடுகளைப் பகல் முழுவதும் கழனிகளிலே மேய்த்துவிட்டு இப்பொழுது அவன் அவற்றைப் பண்ணைத் தொழுவத்திற்கு ஒட்டிக் கொண்டு செல்லுகிருன். . அன்றைய கடமை முடிந்துவிட்டது. மாடுகளும் வயிருற மேய்ந்திருக்கின்றன. இளங்கன்றுகளைப் பண்ணை யிலே பிரிந்து வந்த தாய்ப் பசுக்கள் கன்றுகளை நினைந்து மடி சுரந்து வேகமாகச் செல்லுகின்றன. மாடு மேய்க்கும் பைய னுக்குத் தனது வேலை முடிந்த களிப்பிலே ஒரு பாட்டுப் பாடத் தோன்றுகிறது. பாடுகிருன். ஏதோ ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது. அதையே பாடுகிருன். பாறையிலே கிணறு வெட்டி ஏலேலோ சாமி பாத்திக்கொரு நாத்து நட்டு ஏலேலோ சாமி குட்டைப் பிள்ளை நட்ட நாத்து ஏலேலோ சாமி குலுங்குதடி சீனிச் சம்பா ஏலேலோ சாமி பாறையிலே கிணறு வெட்டி ஏலேலோ சாமி பாத்திக் கொரு நாத்து நட்டு ஏலேலோ சாமி அத்தை மகள் நட்ட நாத்து ஏலேலோ சாமி ஆனைச் சம்பா குலுங்குதடி ஏலேலோ சாமி (நாத்து-நாற்று. பிள்ளை-இளம்பெண். சீனிச் சம்பா, ஆனச் சம்பா என்பவை நெல்லில் இரண்டு வகைகள்.)