பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குண்ரு வயிறன் சின்னக் குழந்தைக்குப் பாட்டென்ருல் மிகவும் பிடிக்கும். பாட்டைக் கேட்பதற்கு மட்டுமல்ல; எளிமையான பாட்டாக இருந்தால் தானே பாடுவதற்கும் குழந்தை விரும்புகிறது. குழந்தைகளுக்காகத் தனிப்பட்ட பாடல்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. சந்தமும் ஒசையும் அவற்றில் முக்கியம்: குழந்தைக்குப் புரியும்படியான எளிய சொற் களிலும் மழலைப் பேச்சிலும் அவை இருக்க வேண்டும். சந்திரன் என்று சொல்லுவதற்குப் பதிலாக சந்தமாமா என்ருல் குழந்தைக்கு நன்கு விளங்கும். ஆங்கிலத்திலே குழந்தைகளுக்காக உள்ள பாடல் களுக்குப் பொருளற்ற சந்தப் பாடல்கள் என்ற பெயர் உண்டு. ஏனெனில் அவற்றிலே பல பாடல்களில் சந்த நயத்தைத் தவிரப் பொருள் இருக்காது. தமிழிலே உள்ள நாடோடி வகையைச் சேர்ந்த குழந்தைப் பாடல்களில் பொருள் ஆழமற்ற பாடல்களையும் பொருள் நிறைந்த பாடல்களையும் காணலாம். ύ