பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

காற்றில் வந்த கவிதை

சம்பா நெல் பயிரிட்டிருக்கிறார்கள். நெற் பயிர் பசேலென்று வயலிலே வளர்ந்திருக்கிறது. கதிர்களும் தோன்றிவிட்டன. அந்தச் சமயத்திலே காற்றிலே அந்தப் பயிர்கள் குலுங்கிக் குலுங்கி ஆடுகின்றனவாம்.

அந்த இடைப் பையன் எதற்காக இந்தச் சமயத்தில் அந்தப் பாட்டைப் பாடுகிருன்? காரணம் சொல்ல முடியாது. வேலை முடிந்ததால் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி பிறந்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியிலே அவனுடைய உள்ளம் அந்த நெற் பயிர்களைப் போலக் கூத்தாடி இருக்க வேண்டும். நெற் பயிர்கள் இளங்காற்றில் வளைந்து வளைந்து ஒயிலாக ஆடுவதைப் பார்த்தவர்களுக்கு அந்த இடைப் பையனுடைய மகிழ்ச்சி நன்ருகப் புலப்பட்டுவிடும். பொருத்தமான பாட்டைத்தான் அவன் பாடியிருக்கிருன் என்றும் நிச்சயமாகக் கூறுவார்கள்.

காற்று வெளியிலே வந்த அந்தப் பாடலையும் அதன் எளிய இசையையும் கேட்டு நான் அப்படியே நின்றிருந்தேன். நாடோடிப் பாடலின் இலக்கணத்தை இப்பாடல் எனக்கு நன்கு தெளிவாக்கியது.

நாடோடிப் பாடல்களிலே மக்களுடைய உள்ளத் துடிப்பைக் காணலாம். அவர்களுடைய ஆசை, அவர்களுடைய ஏக்கம், அவர்களுடைய கனவு, அவர்களுடைய உள்ளக் குமுறல்கள் எல்லாம் அப்பாடல்களிலே மிளிர்கின்றன. அதனுல்தான் நாடோடிப் பாடல்களின்மூலம் ஒரு நாட்டின் எளிய பண்பைக் காண முடியும் என்று கூறுகிருர்கள்.