பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ராட்டைப் பாட்டு 97 வெள்ளிக்கிழமைச் சந்தைக்குப் போய் வேண்டாமென்ருர் எந்நூலை புதன்கிழமைச் சந்தைக்குப் போயும் போகவில்லை எந்நூலும் திங்கட்கிழமைச் சந்தைக்குப் போய் சீந்துவாரில்லை எந்நூலை ஞாயிற்றுக்கிழமைச் சந்தைக்குப் போய் நாயுங்கூட கேட்கவில்லை. இப்படிப் பல சந்தைகளிலே நூலை விற்க முடியாமல் கடைசியிலே அவள் ஆலத்துார் சந்தைக்குப் போகிருள். ஆலத்துரர் அவளுடைய தந்தை வாழும் ஊர். அந்தச் சந்தையிலே பழக்கப்பட்ட ஒருவன் அவள் நூலே வாங்கிக் கொள்கிருன். அவள் காசைப் பெற்றுக்கொண்டு கடைக்குப் போகிருள். ஆலத்துTருச் சந்தையாம் அப்பனுாருச் சந்தையாம் அம்பனூருச் சந்தையிலே அறிந்த கைக்கோளன் கண்டானம் அறிந்த கைக்கோளன் கண்டுமே அஞ்சரைக் காசுக்கு வாங்கினன் நூலையெல்லாம் போட்டுவிட்டு காசைத்தானும் வாங்கிக்கிட்டு காசைத்தானும் வாங்கியதும் கடைக்குத்தானும் போனளாம் எந்தக் கடைக்கு முதலில் போகிருள்? பெண்களுக்குப் பூவெள்ருல் மிகுந்த விருப்பமல்லவா? அதனல் முதலில் பூக் கடைக் குப் போகிருள். என்னென்ன பூ வாங்குகிருளென்று பாட்டிலே பாருங்கள்.