பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

15 சிலாதித்யன்-வட இந்திய அரசன், இவனது மற்று. பெயர்கள் நீ ஹர்ஷன், ஹர்ஷகேவன், ஹர்ஷவர்த் தனன், என்பனவாம், பிறந்தது 24 ஜூன் கி.பி. 590 கலிங்கத்தை ஜெயித்தது கி. பி. 643, அரசாண்ட காலம் கி.பி. 606-647 பூ ஆர். ராமையர்). இவன் கி.பி. 643-ல் பெளத்தர்களுக்கும், ஜைனர் களுக்கும், பிராமணர்களுக்கும் ஒரு பெரிய கூட் டம் கூட்டியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சிவஞானசித்தியார்-அருணகிரி சிவாசாரியார் இயற்றி ய்து. கி.பி. 1300 (டாக்ட்ர் சாமிநாத ஐயர் அவர்கள்.) சிவஞானபோதம்-மெய்கண்டார் இயற்றிய நூல் கி.பி. 223. சிவஞானமுனிவர் - சிவஞானபோதத்திற்கு திராவிட ப்ாஷ்யம் செய்தவர், கி.பி. 18-ம் நூற்ருண்டு, மரணம் 1785, (தமிழ் லெக்சிகன் அகராதி). சிவப்பிரகசர்-பிரபுலிங்க லீலை ஆசிரியர், கி.பி. 17-ம் நூற்ருண்டு, (தமிழ் லெக்சிகன் அகராதி). சிவ புண்ணியத் தெளிவு - உமாபதி சிவா சாரியார் எழுதியது கி.பி. 13-ம் நூற்ருண்டு, (தமிழ் லெக்சிகன் அகராதி) - சிவரகசியம்-ஒப்பிலாமணி தேசிகர் இயற்றியது, கி.பி. 1718, (தமிழ் லெக்சிகன் அகராதி). சிவஸ்கந்தவர்மன்-ஓர் பல்லவ அரசன், ஆண்ட காலம் கி. பி. இரண்டாம் நூற்றுண்டு, (வின்சென்ட்ஸ்மித்) மூன்ருவது நூற்ருண்டு, (பூ பி டி. பூரீனிவாச ஐயங் கார்). சிவாஜி - பிரபலமான மகராஷ்டிர அரசன், பிறந்தது 醬 1680 - மரணம் கி.பி. 1680 - மற்ருெரு அபிப் பிராயம் கி.பி. 1627. சிவாயமாறன் - ஓர் பாண்டிய அரசன், கி. பி. 1615 (கவர்ன்மென்ட் எபிக் ராபிஸ்ட்). சிறுத்தொண்டர்- அறுபத்து நாயன்மார்களிலொருவர் வாதாபியைப் பிடித்தது கி.பி. 642. சீகாழிக்கோவை-சீகாழிப் புராணம், காழி அருணுசலக் கவிராயர் எழுதியது-அவர் காலம் 1712-1719.