பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன் னு ைர 1891-ம்இ கான் எழுத்தாளன் ஆக வேண்டுமென்று ஆசைப் பட்டது முதல், நமது தேசத்திலும், முக்கியமாக தமிழ் நாட்டிலும் உண்டான முக்கிய சம்பவங்களில் காலங்களையும், தமிழ் நூல்கள் எழுதப்பட்ட காலங்களையும், குறித்துக்கொண்டு வந்தேன். இது பிற்காலம் நான் ஒரு நூலாசிரியனுக ஆனபோது எனக்கு மிகவும் உபயோகமாயிருந்தது. ஆகவே தமிழ் மாணவர்களுக்கும், எழுத் தாளர்க்கும் கொஞ்சம் உபயோகப்படக்கூடுமென்று இச்சிறு நூலைப் பிரசுரிக்கலானேன். இந்நூல் தமிழ் நாடககள் எழுதுவோர்க்கும், பேசும் படக் காட்சிகளுக்கு சினுேரியோ (Seenatio) தயாரிப்பவர் களுக்கும்கூட பயன்படும் என்று கினைக்கிறேன். சரித்திசமுகமாய் நிர்ணயிக்கப்பட்ட குறிப்புகள் தவிர மற்றவை களுக்கெல்லாம் இன்னருடைய அபிப்பிாாயம் என்பதைக் குறித் அன்ளேன். இதில் பல தமிழ் நூல்களின் காலமும், புலவர்களின் காலமும் விட்டுப் போயிருக்கலாம். ஆகவே இதை வாசிக்கும் தமிழ் அபிமானி கள் அவற்றை எனக்கு அறிவித்தால், வணக்கத்துடன் அவைகளை ஏற்று, இாண்டாம் பதிப்பில் அவைகலே அச்சிடக் காத்திருக்கிறேன். ப. சம்பந்தம்.