பக்கம்:காலச்சக்கரம்-பொங்கல் பரிசு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதிலுள்ள கவிதைத் துணுக்குகளும், எண்ணத் துணுக் குகளும் புதியதோர் வலிமையோடு என்னைக் கவர்ந்தன. அதன் விளைவாக இந்த நூல் உருவாயிற்று.

நான் எழுதிய நீண்ட கவிதைகள் ‘இளந்தமிழா’ என்ற தலைப்புள்ள என் கவிதைத் தொகுப்பில் சேர்ந்துவிட்டன. தாகூரின் சிறு துணுக்குகளும் நான் எழுதிய துணுக்குகளும் இந்நூலில் இடம் பெறுகின்றன. தாகூரின் நூலிலிருந்து மொழி பெயர்த்தவை ஐம்பது. நானே எழுதியவை அறுபத்தெட்டு.

இவற்றைப் படிக்கும் அன்பர்களிடம் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். ஒரே மூச்சில் எல்லாவற்றையும் படிக்காதீர்கள். ஏதாவது ஒன்றைப் படித்துவிட்டு அதையே சற்று அமைதியாகச் சிந்தித்துப் பாருங்கள்.

அப்படிப் படித்த பலர் பாராட்டியதால் இந்த நூல் முன்றாவது பதிப்பாக இந்த ஆண்டு பொங்கல் திருநாளன்று வெளியாகிறது.

பொங்கலோ பொங்கல்! இன்பம் பொங்குக!

பொங்கல் திருநாள் —பெ.தூரன்
1969