பக்கம்:காலத்தின் குரல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8


வ.க:
1937 நவம்பர் மாதம் சாமநாதபுரம் ஜில்லா பரமக்குடிக் குப் போய் அங்கு புதுசாகத் திறக்கப்பட்டிருந்த அக்ரி கல்சுரல் டிமான்ஸ்ட்ரேட்டர் ஆபீசில் குமாஸ்தா வேலை ஒப்புக்கொண்டேன். 1939 அக்டோபர் வரை அவ்வூரில் இருந்தேன்.

அது எனது இயல்புகளுக்கு ஏற்ற அருமையான சூழ்நிலையாக அமைந்திருந்தது. வேலையே கிடையாது. ஆபீசர் என்று வருகிறவர் எவ்வளவு காலம் சம்பளத்துடன் லீவு எடுக்க முடியுமோ அவ்வளவு லீவுகளையும் அனுபவிக்கும் இயல்புடையாாக இருந்தார். Casual leave leave with pay, leave, on medical certificate, leave on average pay stop. Glugbourgyth seisulf லிவிலேயே போய்விடுவார். அதனுல் நான் தனியாக இருந்து படிக்கவும் எழுதவும் எனக்கு ரொம்ப சவுகரியமாக இருந்தது.

அந்நாட்களில் லோக சக்தி பாரத சக்தி' என்று 2 பத்திரிகைகள். இளைஞருக்கு உணர்வூட்டும் எழுத் துக்கள் தாங்கியவை. அதில் பொறி பறக்கும்’ உணர்ச்சி எழுத்துக்களாலான கட்டுரைகளை இதழ் தோறும் நான் எழுதி வந்தேன். எழுச்சிக் கவிதை களும் கூட. சர்க்கார் ஆபீசில் அலுவல் புரியும் ஒருவன் அப்படிப்பட்ட வேக எழுத்துக்கள் எழுதியது பத்திரிகை ஆசிரியர்களுக்கே வியப்பு தந்தது. அப்போதுதான் "வல்லிக்கண்ணன்' என்ற புனைபெயரை நான் வைத் துக்கொண்டேன்.

1939 கடைசியில், திருநெல்வேலி ஜில்லா ரீவைகுண் டத்துக்கு மாறுதலாகி வந்தேன். அங்கு டிமான்ஸ்ட் சேட்டர் ஆக இருந்த J. S. C. அந்தோணிப் பிள்ளை மட்டமான மனிதன். தன் கீழ் வேலை பார்க்கிறவர் களுக்கு தொல்லே கொடுத்து, சீட்டுக் கிழிப்பதில் உற்சாகமுடைய ஆசாமி நான் கதை-கட்டுரைகள் எழுது