பக்கம்:காலத்தின் குரல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10


வல்லிக்கண்ணன் என்ற பெயர் பத்திரிகை உலகம் அறிந்த பெயர் ஆயிற்று.

மேலும் வளர்ச்சி பெறுவதக்கு சென்னை சேர்வது நல்லது என்ற எண்ணம் எழுந்தது வீட்டில் அம்மா வின் குறை கூறுதலும் முனு முனுப்புகளும் அதிகரித் தன.

ஆகவே, 1942 மே மாதம் ஒரு நாள் அதிகாலையில் நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல்,திருநெல்வேலி டவுனிலிருந்து நடந்தே கிளம்பினேன் காசும் எடுத் துக்கொள்ளாமல், முதல் நாள் 35 மைல் நடந்து. கோவில்பட்டி அடைந்து, இரவில் ஸ்டேஷனில் துரங்கினேன். 2-ம் நாள் 30 மைல் நடந்தேன் இரவில் விருதுநகரை தாண்டினேன். ரோட்டடியில் ஒரு புளிய மரத்தடியில் படுத்து உறங்கினேன் அதிகாலையில் எழுந்து நடந்து 3-ம் நாள் பகல் 12 மணிக்கு மதுரை சேர்ந்தேன். கையில் எடுத்துச் சென்ற சிறிது அளவு ஆவல்தான் உணவு வழியில் கிடைத்த தண்ணிரும். அது ஒரு வெறி. ஆலிவர் கோல்ட்ஸ்மித், கையில் காசில்லாமல், ஐரோப்பா பூரா சுற்றினன், மாக்சிம் கார்க்கி ரஷ்யா நெடுகிலும் நடந்தான் பெனிடோ முசோலினி காசுகள் இல்லாமலே வீட்டை விட்டு வெளியேறிஞன். நானும் ஏன் போகக்கூடாது என்று மனம் கேட்டுக்கொண்டிருந்த காலம்.

மதுரையில் வேலை பார்த்து வசித்த ஒருவரிடம் 3 ரூபாய் பெற்றுக்கொண்டு, காரைக்குடி போனேன். சக்தி”, யுத்த கால நடவடிக்கையாக, சென்னையிலிருந்து காரைக்குடி வந்திருந்தது. 'இந்திராவில் ப. நீலகண்டன் (பிற்காலத்திய சினிமா உலகம் புகழ் ஆசாமி) ஆசிரியர் ஆர். சண்முகசுந்தரம் காரைக்குடி வந்திருந்தார் சக்தி'யில் வேலை கிடைக்குமா பார்க்க லாம் என்று ஆர். சண்முகசுந்தரம் என்னே அழைத்துப்