பக்கம்:காலத்தின் குரல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11


போனுர். தி. ஜ. அறிமுகம் கிடைத்தது. வேலை எதுவும் கிடைக்கவில்லை.

இதுக்குள் என் அண்ணு கோமதிநாயகம் பலருக்கும் கடிதம் எழுதி, நான் காரைக்குடியில் இருப்பதை அறிந்து பணம் அனுப்பி, 'சென்னை போவதாகுல் ரயிலில் போ, வீடு திரும்ப விரும்பினுல், திரும்பி வா' என்று எழுதினர்.

நான் திருநெல்வேலிக்கே திரும்பி விட்டேன்.

பிறகு ‘கலாமோ கினி’ ஆசிரியர் வி. ரா. ரா. முயன்று, 'திருமகள் பத்திரிகையில் எனக்கு உதவி ஆசிரியர் வேலை வாங்கித் தந்தார். 1943 பிப்ரவரியில் திருமகள்’ என்ற சாதாரணப் பத்திரிகையை கலாமோகினி' மாதிரி மறுமலர்ச்சி இலக்கிய இதழாக மாற்ற வேண் டும் என்ற ஆசை அதன் அதிபருக்கு இருந்தது ஆளுல் வசதி இல்லை. எனவே, ஒரே ஒரு மாதம் 'திருமகள் ஆபீசில் வேலே பார்த்துவிட்டு, நான் கோயம்புத்துனர் சேர்ந்தேன். சினிமா உலகம்’ மாதம் இருமுறைப் பத்திரிகையின் துணை ஆசிரியராக. ஆசிரியர் பி. எஸ். செட்டியார் அழைப்பினே ஏற்று அங்கும் என் இலக்கிய வளர்ச்சிக்கு வேண்டிய வசதி கள் கிட்டாததால், 1943 டிசம்பரில் சென்னை சேர்த் தேன். நண்பர் சக்திதாசன் சுப்பிரமணியன் நடத்திய 'நவசக்தி மாசிகையில் உதவி ஆசிரியராக அது அப் போது முற்போக்கு இலக்கிய ஏடு” ஆக நடந்து கொண்டிருந்தது. கே. ராமநாதன் (கம்யூனிஸ்ட்) அதன் துணை ஆசிரியராக இருந்தார்.

பணபலம் இல்லாததனுலும், பத்திரிகை ஒழுங்காக வராததனுலும், திருச்சி கிராம ஊழியன் ஆசிரியர் திருலோக சீதாராமும், நிர்வாகி அ வெ ர. கிருஷ்ண சாமி ரெட்டியாரும் விரும்பி விரும்பி அழைத்துக் கொண்டிருந்ததலுைம், நான் துறையூர் வந்து கிராம