பக்கம்:காலத்தின் குரல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13


சென்னையில் இயங்கிக்கொண்டிருந்தது என் அண்ணு கோமதி நாயகம் (அசோகன்) அதன் துணை ஆசிரிய ராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

சிவசு: ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லே? இலக்கியத்துக்கு சேவை செய்ய எண்ணியா? அல்லது தனிப் பட்ட காரணம் ஏதேனுமா?

வ.க: பல காரணங்கள். முக்கியமான முதலாவது காரணம்: பொருளாதார வறட்சி அப்பா இறந்த பிறகு, குடும்பப் பொருளாதாரம் மிகவும் சரிந்து, வறுமை நிலையே தொடர்ந்தது பொருளாதார வசதி திருப்திகரமாக இருந்தால்தான் . இல்லற வாழ்வும் சந்தோஷம் திசம்பி யதாக அமையும் இல்லையெனில், பலவித சிக்கல் களும், தகராறுகளும், அமைதியின்மையும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

நான் சந்தோஷமாக வாழ விரும்பினேன். அதுக்காக எனக்கு என்று ஒரு வாழ்க்கை முறையை தேர்ந்து கொண்டேன். அது சீரான, திட்டமான, நிரந்தரமான வருமானம் தரக்கூடியது அல்ல. ஆணுல். தனி நபரு டைய சந்தோஷம் என்பது பணத்தை நம்பி இருப்பது இல்லை. அது வாழ்க்கைத் துணை என்று வரக்கூடிய பெண்ணுக்குப் புரியாது ; பிடிக்கவும் செய்யாது.

பெண்களைப் பற்றி எனக்கு எப்பவுமே நல்ல அபிப்பிரா யம் கிடையாது அதிலும், சைவ வேளாளர் இன மத்தியதர வர்க்கத்துப் பெண்கள் - அதிலும், காது காத்த வேளாள குல திலகங்கள் - பற்றி. இவர்கள் மனே விசாலம் பெருத, குறுகிய நோக்குடைய, தன் னல நாட்டம் மிகுதியாக உடையவர்கள். ‘வாழ்க்கைத்