பக்கம்:காலத்தின் குரல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

స్కో " & میگر 9 எளிதில் கிடைக்கக் கூடிய-புத்தகங்களை மட்டுகே வெளியிடுகின்றன திறமையாளர்கள் - அவர்கள் ஸ்டார் எழுத்தாளர்களாக இல்லாது போனுல்-எவ் வளவு சிறப்பாக எழுதியிருந்தாலும், அவர்களது படைப்புகளை பெரிய பதிப்பகங்கள் வெளியிட முன் வரு வதில்லே இத்திலேயில், ஆற்றல் பெற்ற இணைய எழுத் தாளர்களின் எழுத்துக்களும், சோதனை ரீதியான முயற்சிகளும் புத்தக வடிவம் பெற வாய்ப்பே இல்லாது போகிறது சிறு பதிப்பகங்கள் இவ் வகையில் செயல்பட முடியும் திறமையுள்ள இளைய எழுத்தாளர்களின் படைப்புகள், சோதனை ரீதியான இலக்கிய முயற்சிகள், தசமும் தகுதியும் வாய்ந்த எழுத்துக்களை இவை புத்தகமாக்க லாம். அதற்கு உற்சாகமும் உழைப்பாற்றலும், ஆசை நிறைந்த திட்டமும் மட்டும் இருந்தால் போதாதே! பணபலம் வேண்டும் தயாரித்த புத்தகங்களை விற்பனை செய்வதற்குப் பொறுமையும் கடின உழைப்பும் தேவைப்படும் தமிழில் புதுமையும் வளமும், இளமையும் இலக்கியச் செழுமையும், சிந்தனைச் சிறப்பும், காலத்தோடு ஒட்டிய கருத்து வளர்ச்சியும் செல்வமாகச் சேர்வதற்கு சிறு பதிப்பகங்களே துணை புரிய முடியும் சிவக: இன்று வெளிவரும் பெரும் பத்திரிகைகள் பற்றி தங்கள் எண்ணம் யாது? பெரும் பத்திரிகைகள் சர்குலேஷனை பெருக்குவதி லேயே குறியாக இருக்கின்றன. இதற்காக, அவற்றுக் குள்ளேயே போட்டி போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.