பக்கம்:காலத்தின் குரல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவசு:

36 தற்காலத்தில் தமிழில் விமர்சனத்துறையில் ஆரோக் கியமான சூழ்நிலை இல்லை. விமர்சனத்தில் தனிமனிதத் தாக்குதல் வேண்டாத விஷயமேயாகும். தமிழ் அகடமிசியன்' பற்றி என்ன எண்ணுகிறீர்கள், இவர்கள் தமிழோடு எந்த வகையில் சம்பந்தப்பட்டிருக் கிருச்கள்? அவர்களுடைய முறையான கல்விப்பயிற்சி அகட மிசியன்’களின் ரசனைத்திறனை கெடுத்துவிட்டது போலும். அதல்ை அவர்களும் மாணவர்களிடம் இயல்பாக இருக்கக்கூடிய ரசனை உணர்வை தீய்த்து விடுவதிலேயே ஆர்வமாக இருப்பதாகத் தோன்று கிறது. இலக்கியங்களை ஆய்வு செய்வதில் ஈடுபட்டால் கூட. படைப்புகளின் நயங்களையும் படைப்பாளிகளின் தயங்களையும் படைப்பாளியின் உள்ளததையும காண முயல்வதற்கு பதிலாக, தேவையில்லாத பட்டியல் தயாரிப்பதிலேயே அவர்கள் உற்சாகம் காட்டுகிருர் கள். தற்கால இலக்கியம் கல்லூரிகளில் பாடத்திட்ட மாக வைக்கப்பட்டாலும் கூட, அகடமிசியன்களின் போக்கு பழமையைப் போற்றுவதிலேயே ஆர்வம் காட்டுவதாக இருக்கிறது மாணவர்களுக்கு இலக்கிய ஈடுபாட்டை உண்டாக்குவதற்கு பதிலாக, பரீட்சையில் மதிப்பெண்கள் பெறுவதற்கு ஏற்ற விதத்தில் அவர் களே தயார்படுத்தி விடுவதாகவே தெரிகிறது. சில உற்சாகிகள் புதுமை பண்ணுகிருேம் என்று சொல்லி இலக்கியத்தைக்கூட அல்ஜிப்ரா ஆகவும் ஜியாமட்ரி யாகவும் மாற்றிக்கொண்டிருக்கிருர்கள்-ஈக்குவேஷன்