பக்கம்:காலத்தின் குரல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கவிதை முன்னுலும், இப்பொழுதும் எப்படி உள்ள து முன்பு கவிதையில் புதுமை, வளமான கற்பனே, இனிய சொல் ஒட்டம். சொல் வளம் உள்ளத்தின் உண்மை ஒளி, தனித்த பார்வை, விசாலநோக்கு முதலியன மிகுதியாக இருந்தன. உதாரணமாக, கவி பாரதியா ரின் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் பிறகு, பாரதியாரையும் பாரதிதாசனையும் பின்பற் றியே செல்வதும் இமிடேட் பண்ணுவதும் அதிக மாயிற்று. சுரதா போன்றவர்கள் ஏதோ புதுமையாகச் செய்திருந்தாலும், பரந்த அளவில் அவர்கள் செயல் படவில்லே. - இகனுலேயே, மரபுக் கவிதை பாரதிக்கும் பாரதிதாச னுக்கும் பிறகு வளமாகவும் ஆரோக்கியமாகவும் வளர வில்லை என்று சொல்லவேண்டியிருக்கிறது. கண்ணதாசன், வாணிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றெல்லாம் பெயர்கள் சொல்ல லாம். ஆணுல், ஆழமான-கனத்த, இலக்கிய நிரந்தரத் தன்மை பெற்ற கவிதைகளையோ காவியங்களையோ இவர்களில் எவரும் சாதனை' என்ற தன்மையில் செய்யவில்லை மனிதாபிமானம் முற்போக்கு என்ற தன்மையில் ரகுநாதன், டி. கே. எஸ். அருணுசலம், கைதி’ மற்றும் அநேகர் கவிதைகள் எழுதியிருக்கிருர்கள். ஆனாலும் பாரதி, பாரதிதாசன் அளவுக்கு. அவர்களையும் மீறி முன்னேறும்படி, சாதனைகள் புரிந்திருப்பதாகச் சொல் வதற்கில்லே.