பக்கம்:காலத்தின் குரல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவசு: 44 எழுத்து, படித்து ரசிக்கப்பட வேண்டும் என்ற எண் ணத்துடன் தான் எழுதப்படுகிறது. என்ருே வரக் கூடிய-தசமும் அறிந்து படித்து ரசித்துப் பாராட்டக் கூடிய-இனம் தெரியாத சிறந்த வாசகனுக்காக எழுதுவதாகச் சொல்கிற படைப்பாளிகூட, தனது எழுத்து படித்து ரசிக்கப்பட வேண்டும் என்ற நோக் கத்துடன் தான் எழுதுகிருன். 'ஆத்ம திருப்திக்காக" எழுதுவதாகச் சொல்லிக் கொள்கிறவர்கள் சும்மா உபசாரத்துக்காகத் தான்' அப்படிச் சொல்கிருர்கள். எழுதுகிறபோது எழுத்தைப் பற்றிய - உணர்வு தான் இருக்கும், ஒரு நல்ல படைப்பாளிக்கு வாச கனப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் எண்ணிக் கொண்டே எழுதுகிறவன் பத்திரிகைக்குத் தகுந்தபடி கதை. கட்டுரை எழுதுகிறவளுகத்தான் இருப்பான். இலக்கியம் சுய அனுபவ வெளிப்பாடா, அல்லது Secondary information abs @Gåssoruor? @şi Qsis லாத முற்ற முழுக்கக் கற்பனை எழுத்தை ஏற்க முடியுமா? இரண்டு விதமாகவும் இருக்கலாம். சுய அனுபவ வெளிப்பாடு உயர்ந்த படைப்பாக, எல்லோரையும் ஈர்க்கும் சக்தி உடையதாக அமைகிறது சகல உணர்ச்சிகளும் சகலவிதமான நிகழ்வுகளும் சுய அனுபவங்களாக ஒருவனுக்கு சித்திப்பது சாத்திய மில்ல பல்வேறு விஷயங்களையும் எழுதுகிறவன்; Secondary information-agush utusiru(93.5 Goustiniq-u தேவை ஏற்படுகிறது. அப்படி கிரகிக்கிற தகவல்களைக்