பக்கம்:காலத்தின் குரல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 அரசியல் தத்துவச் சார்பு என்று சொன்னுல், மார்க் எtய தத்துவத்தில் ஈடுபாடு கொண்ட அநேகர் சிறு கதைகளிலும், நாவல்களிலும் இத் தத்துவப் பார்வை யைப் பிரதிபலிக்க முயன்று வருகிருர்கள். டி. செல்வ ராஜ், பொன்னிலன், சின்னப்ப பாரதி போன்றவர் களைக் குறிப்பிடலாம் இலங்கை எழுத்தாளர்கள் இத் தரத்தில் தீவிரமாக முன்னேறியிருக்கிருக்கள். அரசியல் தத்துவச் சார்பு ஒரு எழுத்தாளனுக்குக் கண்டிப்பாக இருந்தே தீர வேண்டுமா என்று கேட் டால், இருந்தே ஆக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்பதுதான் என் சொந்த அபிப்பிராயம். உங்களின் சார்பு நிலை கூற முடியுமா? நான் எந்த தத்துவத்தையும் - பொதுவானது, அரசி சியல் ரீதியானது எதையும்-சார்ந்திருக்கவில்லை. வாழ்க்கை தான் எனது பாடநூல். மனிதர்களின் அனுபவங்கள் தான் எனக்கு அறிவூட்டும் தத்துவம். மனிதாபிமானமும் அன்பும் தான் எனது மதம். தான் முன்பே குறிப்பிட்டுள்ளது போல, எதைப் பற்றியும் எப்படி வேண்டுமானுலும் எழுதலாம். ஆல்ை, எழுதப்படுபவை தசத்துடன் அழகாக, கலே நயத்தோடு, எழுதப்பட வேண்டும். இதுவே என் கொள்கை, வாழ்தலுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? வாழ்க்கை வேறு; எழுத்து வேறு தான்.