பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 ◆ காலந்தோறும் பெண்

எஞ்ஞான்றும் அநுமதிக்காமல் தடைக்கல்லாக வழியில் குறுக்கிடும் நாசச் சக்தி. அவளை எந்த நிலையிலும் நம்பலாகாது, இரகசியங்களை வைத்துக்கொள்ளத் தகுதியற்றவள் என்றெல்லாம் பெண்ணின் இருண்ட பரிணாமங்களைத் தாங்கும் அணிமொழிகள் ஏராளம், ஏராளமாகப் புனையப்பெற்று, நெறிப்படுத்தப் பெற்று, பெண்களாலேயே 'பெருமையுடன்' ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. இதனால், ஒழுக்கம் என்று பேசப்படும்போது, பொது வாழ்க்கை என்று பேசப்படும் போது, அதில் பங்கேற்கும் இரு பாலருக்கும் உரியதாக வேண்டிய பொறுப்பில் பழிப் பொறுப்பு மட்டும் பெண்ணிடமே சுமத்தப்படும் நியதியும் காலம் காலமாக வலிமை பெற்று அசைக்க முடியாத அரணாக உறுதி பெற்றிருக்கிறது.

இது ஏன்?

பெண்-ஆண் என்று குறிப்பிடும்போது, இருவரும் மனிதப்பிறவிகள். இது நல்லது, இது உகந்ததல்ல என்று பகுத்தறியும் பாங்கு ஆறாவது அறிவாக மனிதப் பிறவிக்கு உரித்தாக்கப்பட்டிருக்கிறது.

அறிவும் மதிநுட்பமும் மிகுந்த ஆற்றல் பெருகுவதனால், இன்பமும் துன்பமும் அதிகமாக உணரப்படுகின்றன.

ஒரு சமயம் ஒரு போரில் பின்வாங்கிய இராணுவப் படையினரிடையே மருத்துவ அறிஞர் ஒருவரும் இருந்தாராம். வருவதை ஏற்றுக்கொண்டு தலைவனின் ஆணைப்படி பின் வாங்கிய படையினர், வழி தெரியாக் கானகங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் நடக்கையில், மருத்துவ அறிஞரோ, ஒவ்வொரு நிமிடத்திலும், மரணத்தின் திகிலை அனு பவித்தாராம். முடிவில், எவரேனும் ஒரு வீரரைத் தன்னைச் சுட்டுக் கொன்றுவிடும்படி கெஞ்சும் அளவுக்கு பசியும், களைப்பும் மேலிட சித்திரவதையை அனுபவித்தாராம். ஒருவரிடமும் அதற்கும் துப்பாக்கிக் குண்டுகள் இல்லை. அவர்