பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஒடுக்கல் சாத்திரத்தில் ஒப்பனைக் கருவிகள் ՙւյւտ»տաք தலைப்பில் ஒரு துண்டு மஞ்சளைக் கட்டிக்கொண்டு போம்மா’ என்று முதிய பெண்கள், இளையவர்களுக்கு, மரணம் நிகழ்ந்த வீட்டுக்குச் செல்லும்போது சொல்லுவார்கள். மரணம் சம்பவித்த வீட்டிலிருந்து தலை முழுகாமல் திரும்ப முடியாது. கிராமங்களில் ஆறு அல்லது குளங்களில்தானே தலை முழுகுவார்கள்? நீராடும்போது, உடலழுக்குத் தேய்ப்பதோ, துணி துவைப்பதோ முக்கியமில்லை. ஆனால் கட்டுக் கழுத்திகளான மங்கலப் பெண்கள், வெறுமே நீராடக்கூடாது. மஞ்சளை உறைத்துப் பூசிக்கொண்டுதான் நீராட வேண்டும். அதற்கு அந்தக் காப்பு மஞ்சள் சேலைத் தலைப்பில் முன்னெச்சரிக்கையாக வைத்திருக்க வேண்டும். அறிவார்ந்த ரீதியில் வேறு பல காரணங்களுக்காக மஞ்சள் பூசிக் குளிப்பது வழக்கமாக இருக்கலாம். முகத்திலும், மேனியிலும் மழமழப்பும் ஒளியும் கூடுவதாக வைத்துக் கொள்ளலாம். ஆனால், அழுக்கு உடம்பில், சிக்குத் தலையுடன், ஒரு காய்ந்த மஞ்சள் துண்டை சாஸ்திரத்துக்காகக் கல்லில் தேய்த்து நெற்றியில், கன்னங்களில் வைத்துக்கொண்டு அழுக்குத் தேய்க்க நேர மில்லாமல், அல்லது அவசியமில்லாமல் நீராடும் முக்கியம், அறிவுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. அதேபோல், ஒருவரை ஒருவர், குங்குமம் தொட்டு வாழ்த்திக் கொள்ளும் வழக்கம் வேரூன்றி இருக்கிறது. 'மஞ்சளும், குங்குமமுமாய் இரம்மா’ என்ற வாழ்த்துதலில்தான் பெண்ணின் உயிர் நாடியே தொக்கிக் கொண்டிருக்கிறது.