பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 103 இந்த மஞ்சள் குங்குமங்கள், சாதாரணமாக ஒப்பனை அலங்காரங்களுக்குரிய பொருள்களே. ஆனால் இவை கணவனுடன் வாழ்வதற்கான சின்னங்களாகப் பரிபாலிக்கப் படுவதன் காரணம் யாது? கோழி, ஆடு, பன்றி முதலிய வீட்டுப் பிராணிகள், மாமி சத்துக்காகவே பரிபாலிக்கப்படுகின்றன. அவற்றைப் பேணிப் பராமரித்து, ஊட்டமளிப்ப தெல்லாம், அவற்றை அடித்துக் கொல்லும் செயலில் பூரணமாகிறது. அவற்றைக் கொன்று. இரையாக்கிக் கொள்வதற்கே அவற்றின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒரு பெண்ணின் மஞ்சள்-குங்குமம், மங்கலச் சேர்க் கைகளின் முக்கியத்துவம், கணவனைச் சார்ந்தே கரிசனம் காட்டப்படுவது எதனால் ? அவற்றின் இழப்பைப் பெண்ணுக்குக் கொடுரமாக்குவதற்குத்தான் என்றால் தவறில்லை. மேனியழகைப் பராமரிக்கக்கூடிய சில பொருள் கள், கணவனுடன் வாழும் மேன்மைக்குரிய மங்கலச் சின்னங்களாக சக்தி'யேற்றப்பட்டு, அவள் உள்ளத்தை, உயிரனைய உள்ளொளியைக் கவ்விப்பிடிக்கும் பிணிப்புக்காக மாறிப் பதிந்துவிடுமளவிற்கு, அவள் கணவனுக்கே உரிய பாவையாக தனித்த உணர்வோ, அறிவோ, சிந்தனையோ இன்றி ஒடுக்கப்படுகிறாள். இந்த ஒடுக்கல் மஞ்சள், குங்கும மங்கலத் தாலியுடன் பூரணமாகிறது. கோழிக்கும், ஆட்டுக்கும், பன்றிக்கும் தங்களை யமன் வட்டமிடும் முன்னுணர்வு இல்லாமல் இருக்காது. பகுத்தறிவு அற்ற விலங்கினங்களுக்கு இயல்பூக்கம்’ என்பது இயற்கையாக அமைந்த சிறப்பாகும். ஆனால் மனிதரை அண்டி, அவர் போடும் உணவுக்காக அடிமை வாழ்வுக்குப் பழகிய நாகரீகம்’ விலங்குகளை வந்தெய்திய பிறகு, மனிதரை விட்டுப் போகத் தெரியாமலே, இயல்பூக்க முன்னுணர்வு மழுங்கிப் போகிறதோ என்னவோ?