பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 105 சடங்கை, அவமானத்தை, அவள் உள்ளத்தைக் குதறிப் பிடுங்குவது போன்ற கொடுரத்தை, அவளைப்போல் கணவனை இழந்த பாவிகள்தாம் செய்வார்கள். இந்த நிகழ்ச்சிகளை, அவளுடைய சொந்த மகளோ, அன்னையோ கூட, சுமங்கலிகளாக இருந்தால் பார்க்கலாகாது. அவளை நீர்க்கரையில் நிற்கச் செய்து, அடித்துக்கொண்டு அழுது, கொடுமையாக, மஞ்சள் பொடியை வீசி எரிந்து, இந்தா, கடைசி, கடைசி, தொலைத்துக்கொள் என்று கடுமையான சொற்களால் குதறுவார்கள். அதாவது இந்தக் கொடுமையை ஏற்றி, இதற்குள்ளாகும் நிரபராதியான பெண்ணை உருக்குலைப்பதே இந்த மஞ்சள் குங்குமங்களின் உட்பொருளோ என்று இத்தகைய காட்சியைக் காண நேர்ந்த நான் உள்ளம் துடிதுடித்துப் போனேன். இந்நாட்களில், எத்தனையோ சீர்திருத்தங்கள் வந்திருக்கின்றன. கணவனை இழந்த பெண்கள் வண்ணச் சேலை உடுத்துவதும் பொட்டணிவதும் முகம் திருத்திக் கொள்வதும் வழக்கம் என்று வந்திருக்கிறது. ஆனால் அவள் உள்ளத்தில், கணவன் இழந்ததால் தான் ஒரு குற்றவாளி போன்றும், துர்ப்பாக்கியவதி என்றும் ஏற்பட்டுவிடும் வடு, அகலுவதில்லை. அந்த வடுவை அப்படியே சமுதாயத்துக்கு ஒப்பாதவளாக வைத்திருக்க, இதே குங்குமம்-மஞ்சள் சிலும்பிக் கொண்டு கேள்விக்குறி நிற்கின்றன. இந்த ஒடுக்கல் கொள்கை இந்த இருபதாம் நூற்றாண்டில் சக்தி வாய்ந்த சாதனமாகிய திரைப்படங்களின் வாயிலாக, கல்வி கற்று, அறிவியலாளராக வளர்ச்சி பெற்ற பெண் பாலரையும் கூட அக்குற்ற உணர்வினின்று விடுபட இயலாதவராக அறிவுறுத்தப்படுகிறது. கணவன் இறந்ததைக் காட்ட, கொடுரமாக, ஒரு கை வந்து அவள் பொட்டை அழிக்கும். வளையல்களை உடைக்கும். முடியை அவிழ்க்கச் செய்யும். ஏன்? இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்குச் செல்லும் இந்த நூற்றாண்டின் இறுதிக்