பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 காலந்தோறும் பெண் காலங்களிலும்கூட, கைம்பெண் வெள்ளைச் சேலையை விரும்பி ஏற்பவளாகச் சித்தரிக்கப்டுகிறது. திருமணம் கணவனையும், மனைவியையும் ஈருடல் ஒருயிராகச் செய்யும் முக்கியமான நிகழ்ச்சியாகக் கருதப்பட்டு, கருத்தொருமித்த காதலராக இருவரும் இன்பமாக வாழ்ந்த கணவன் மறைந்ததும் மனைவி விரும்பி, கைம்மைக் கோலம் ஏற்பதை தர்ம நியாயமாகச் சித்தரிப்பவர்கள், மனைவி இறந்ததும் அதே வகையான இழப்புக்குள்ளான கணவன் எந்தப் போகத்தையும் துறப்பவனாக, மறந்தும் யாரும் சித்தரிப்பதில்லை. மாறாக அவளை இழந்த சோகத்தை மறக்க, அவளையே உரித்து வைத்தாற் போலிருக்கும் அவள் சகோதரியையோ, வேறு ஒரு பெண்ணையோ காதலிப்பான்; அல்லது கல்யாணம் செய்துகொண்டு அவளே இறுதியில் அவனிடம் கேட்டுக்கொண்ட வரத்தை நிறைவேற்றுவான். "திருமணமே செய்துகொள்ள மாட்டேன்’ என்று பிடிவாதமாக இருப்பவனைக்கூட, இன்னொரு பெண்ணின் நற்குணம், தர்ம நியாயக் கல்யாணத்துக்கு அவனை இனங்கச் செய்யும். வேத காலத்திலும், ஸ்மிருதிகள் என்ற கோட்பாடுகள் தோன்றிய காலத்திலும், "கைம்பெண்கள்’ என்று அறிவும் மனமும் முற்றிலும் ஒடுக்கப்பட்டு, பதப்படுத்தப்படும் நெறிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை எனலாம். தர்ம சூத்திரங்கள் என்ற பெயரில் குறிக்கப்பட்டு, ஆதியில் சட்ட நெறிகளைத் தோற்றுவித்த ஆசிரியர்கள், கைம்பெண்கள் மணம் புரிவதற்கு இடமளிக்கிறார்கள். ஒருவன் சந்ததியில்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவி, அதே கோத்திரத்துக்குரிய ஒருவருடன் கூடி ஒரு மகனைப் பெறலாம். அந்த மகன் இறந்துபோன கணவனுடைய சொத்துக்களைப் பெறவும், அவனுக்கு நீர்க்கடன் செய்யவும் உரிமையுள்ளவனாகிறான்.