பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 9

அந்த கிலியிலிருந்து விடுபடாமலேயே மாண்டுபோக, ஏனைய வீரர் பத்திரமாக உயிர் பிழைத்து, மீண்டார்களாம். இதேபோல், அறிவின் வாயிலாகத்தான் இன்பங்களையும் நுட்பமாக ரசிக்க முடிகிறது என்றால் தவறில்லை. தன்னை மறந்து ஒர் இயற்கை காட்சியை ஒரு முழு முடனால் நுட்பமாக இரசிக்க இயலாதுதான். கலாரசனைக்கும் அறிவின் முழு மலர்ச்சிதான் துணை செய்கிறது. இதுமட்டுமின்றி, வாழ்க்கையில் இன்ப-துன்ப உணர்வுகளுக்கு அதிகமாக வசப்பட்டுத் தன்னை இழக்காமல் அமைதியுடன் எதையும் ஏற்கும் மனப்பண்பு, அல்லது விவேகமும், அறிவினால்தான் சாத்தியமாகிறது. இந்த உண்மையான படிக்கற்களை வைத்து ஆண் பெண் சமத்துவத்தை நோக்குங்கால், பெண்ணின் தரம் மிகத் தாழ்ந்து நிற்கிறது. அவள் தூலமாகவும் சூக்குமமாகவும் தன் அறிவாற்றலைக் கட்டுப்படுத்தும் சக்திகளை அறியா தவளாகவே இருக்கிறாள். ‘சவரன் அவளோடு கூடினாலே அவளுக்கு மதிப்பு உண்டாகிறது. இல்லையேல் எந்த இலக்கமும் இல்லாத பூஜ்யமாகவே அவள் மதிப்பிழந்து நிற்கிறாள். சமுதாயத்தின் உற்பத்திக்கான சக்தியாகத் திகழும் அவளுடைய நிலையை இன்றைய சமுதாய அமைப்பின் ஆதிக்கக் கோட்பாடுகள் நாலியும் பீலியுமாகக் குதறி எறிய முற்பட்டிருந்தும் ஒரு வார்த்தை கேட்கத் தெரியாதவளாகவே இருக்கிறாள். உயிரற்ற அணிகளால் கவர்ச்சி என்ற பொய்மையைத் தன்னில் ஏற்றிக்கொள்வதையே நல்வாழ்வுக்கான சாயுச்சியம் என்று கருதி, அதற்காகத் தனது ஏனைய மேன்மை நலங்களைப் பணயமாக்க அவள் தயங்குவதில்லை. கற்பொழுக்கம் என்ற கோலினால் அவளைக் குற்றுயிராக அடித்துக் குப்பையில் தள்ளினாலும், அந்த