பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 109 சங்கராசரிய மடத்தில், தென்கலை வைணவப் பெண், கைம்பெண்ணாக இருந்தால் முடியெடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று விலக்கு அளித்தார்களே, அந்த மர்மம் என்ன தெரியுமா? அடுத்து அதைப் பார்ப்போம். 16. புராணப் புதைகுழியில் மூடப்படும் நட்சத்திரங்கள் ஈராண்டுக்கு முன்போ, இன்னும் சில மாதங்களுக்கு முன்போ, (குறிப்பாக நினைவில்லை) சென்னை தொலைக்காட்சியில், ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு நாடகம் ஒளிபரப்பாயிற்று. அந்த நாடகத்தில், ஆதிசங்கரரின் அன்னையார் முண்டிதமும் முக்காடுமாகக் காட்சி அளித்தார். சேலைக் கட்டும் தென்னிந்திய ஸ்மார்த்தப் பெண்கள் அணியும் விதமாக இருந்தது. தொலைக்காட்சி நிறுவனம் ஒரு மிகப்பெரிய சமய குருவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கின்றோம் என்ற பொறுப்புணர்வு சிறிதும் இன்றி ஏதோ புனை கதைகளைக் காட்சிகளாக்குவது போன்ற (அ)சிரத்தையுடன் செயல்பட்டிருந்ததைக் குறித்து வருத்தமாக இருந்தது. ஆதிசங்கரரின் காலத்தில் அந்த வழக்கம் இருந்ததா? இல்லையா? என்ற வினா ஒருபுறம் இருக்கட்டும்; ஆதிசங்கரரின் தந்தை, நம்பூதிரி இனத்தவர் என்பது உண்மை. அண்மையில் ஆதிசங்கரரின் வரலாறு சமஸ்கிருத மொழியில் படமாக்கப்பட்டு இந்திய திரைப்பட விருதையும் பெற்றிருக்கிறது. இந்தப் படம் சில மாதங்கட்குமுன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயிற்று.