பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் + 1 11 தனிமையையும் அந்திம கால நினைவையும் மிகுந்த கவலையுடன் கருத்தில் கொள்கிறார். இறுதிக்காலத்தில் கங்கரர் தம் அன்னைக்கு அந்திமக் கிரியை செய்ய வருவதாக வாக்களிக்கிறார். இந்த வரலாற்றுத் தரவுகளை ஆய்வுக்கண் கொண்டு பார்க்கும்போது, சில உண்மைகள் புலப்படுகின்றன. நாயர் இனத்துப் பெண்களே நம்பூதிரிகளால் திருமணம் என்ற பந்தத்தினால் பிணைக்கப் பெற்று, நம்பூதிரிப் பெண்களாக ஏற்றம் பெற்றபின் அவர்களுக்குப் பல கடுமையான சட்ட திட்டங்களும், கற்பொழுக்கமும் விதிக்கப்பட்டன. அந்தர் ஜனம்’ என்றாலே, பர்தாவுக்குள் எளிருப்பவர் என்று பொருள் படக்கூடிய வகையில் அவர்கள் "ஆசாரம் காப்பவர்களாயினர். இவர்களுக்கு விதிக்கப்பட்ட கற்பொழுக்கக் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையானவை. இவர்கள், இதற்கென்று செயல்பட்ட குழுவினரால் சந்தேகிக்கப்பட்டால், பிரஷ்டையாகி குடும்பத்தில் இருந்து விலக்கப்படுவர். நம்பூதிரிப் பெண்களுக்கு மட்டும் இத்துணை கட்டுப் பாடுகள் ஏன் விதிக்கப்பட்டன? பிள்ளை பெறும் கருவி களாகவே ஏன் பாவிக்கப்பட்டனர்? ஏனெனில் அவர்கள் பூர்வீகம், மிகுந்த உரிமைகளை உடைய, சுயேச்சையான இயல்பில் அல்லவா வலிமை பெற்றிருந்தது! புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், லலிதாம்பிகா அந்தணர் ஜனம் எழுதிய ஒரு சிறுகதை இப்போது நினைவில் வருகிறது. ஒரு நம்பூதிரிப் பெண்மணியான தாய், அந்தக் காலத்தில் தாழ்ந்த வகுப்பினனான ஒரு புலையனின் குடிலில் மரணப்