பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 113 வரவேற்று, நடுவராகவும் அவர் பொறுப்பேற்றார். இருவர் கழுத்திலும், மாலை ஒன்றைக் கொடுத்து அணியச் செய்கிறார். எந்த மாலை முதலில் வாடத் தொடங்குகிறதோ, அவரே தோற்றவராகிறார். அதாவது, மன இறுக்கம் அதிகமாகி, வெம்மை வெளிப்படும்போது உடலில் படும் மலர் வாடத் தொடங்கிவிடும். மண்டனமிசிரர் தோற்று சரஸவாணி வெளியே வருகையில், சங்கரரின் கால்களில் மண்டனமிசிரர் பணிந்து தோல்வியை ஒப்புக்கொண்டு தம்மைச் சீடராக ஏற்கும்படி வேண்டுகிறார்; ஆனால் சரஸவாணி இதை ஒப்பவில்லை. இந்து தருமப்படி, கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே ஒரு முழு அங்கமாகின்றனர். எனவே அவரை மட்டும் வாதில் வென்றதாகச் சொன்னால் போதாது. மேலும், அவர் அவளையும் வெல்லாமல், கணவரை மட்டும் சீடராக்கிக் கொள்ள துறவுநெறிக்கு இழுப்பது நியாயமும், தருமமும் அல்ல. எனவே “எனது வினாக்களுக்கு நீங்கள் சரியான விடையளித்தாலே வென்றவராவீர். பின்னர், என்னையும் உங்கள் நெறியில் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று விதிக்கிறார். அவர் தொடுத்த வினாக்களுக்கு உரிய விடையளிக்க சங்கரர் உலகியல் ஞானம் பெற வேண்டி இருந்தது. பின்னர், மண்டனமிசிரர், சரேந்திராசாரியார் என்று பெயர் பெற்ற சீடராகிவிட, அவர் மனைவி என்ற நிலை விட்டு ஒரு தாய் என்ற உறவோடு சங்கரருடனும், சீடர்களுடனும் சரஸவாணி ஏகினார். ஆனால், சரஸவாணி பற்றிய இந்த விவரங்கள் மறைக்கப்பட்டு, அவர் சரஸ்வதியின் அவதாரம் என்ற தெய்வச் சிமிழில் அடைக்கப்படுகிறார். வரலாற்றில், தப்பித் தவறி ஒரு நட்சத்திரம் ஒளிய வந்தாலும், ஒ அது மானுட வடிவல்ல, மானிடப்பெண்ணால் எட்டமுடியாத தெய்வீகம் எட்டு வதற்குரியதல்ல என்ற அறிவுறுத்தலுடன் புராண, கா.பெ. - 8