பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 115 ஆணாதிக்க வெறி தரும சாத்திரங்களில் புகுத்தப்பட்டது. இந்தப் புகுத்தப்பட்ட சாத்திரங்களுக்கு மருமாதிகாரிகளாக சங்கராசாரியாரின் குரு பீடங்களில் அமர்ந்தவர்கள் தாங்களாகவே நியமனம் செய்துகொண்டாற் போல் பரிபாலனம் செய்தார்கள்; செய்து வருகிறார்கள். வைணவ நெறியைக் கடைப்பிடிக்கும் ஆதி மரபினரான தென்கலையார், சமண சமுதாயத்தினருக்கு உரிய நெறிகளை கைக்கொள்வதை மூர்க்கமாக எதிர்ப்பவர்களாக இருந்தார்கள். எனவே அவர்கள் மரபில் எந்தப் பெண்ணும் கணவனை இழந்ததற்காக, முடியை இழக்கக்கூடாது என்று விதிக்கப் பட்டது. அவ்வாறு ஒரு செயலுக்கு அபலைப் பெண்களை உட்படுத்துபவர். நரகத்துக்குச் செல்வார்’ என்றுகூட வைணவ தரும சாத்திரங்கள் எழுதப்பெற்றன. 'இந்து நாகரீகத்தில் மகளிர் நிலை என்ற நூலில் டாக்டர் அல்டேகர் என்ற வரலாற்றாசிரியர், மகளிருக்கு இழைக்கப்பெற்ற இக்கொடுமை பற்றி மிக விரிவாக ஆராய்கிறார். ஆனால், வைணவ நெறியினரில் தொன்மையான தென் கலை மரபிலிருந்து பிரிந்து புதுமைகளுக்கு இடம் கொடுத்தனர், பின் நாளைய வடகலை மரபினர். இவர்கள், பெண்களின் உரிமைகளைப் பறித்து, அலங்கோலம் செய்வதில் (ஸ்மார்த்த) சைவப் பிரிவினரின் புதிய சாத்திரங்களை ஏற்றி, சைவ வைணவ ஒருமைப்பாட்டை நிலைநாட்டினார்கள் ! எனவே சங்கராசாரிய மடத்துப் பிராம்மணர், தென்கலைப் பெண்களுக்கு விலக்களித்து, வடகலைப் பிரிவுக் கைம்பெண்கள் முடியை இழக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்! புதிர் விடுபடுகிறதல்லவா? இன்னும் பார் ப்போமே!