பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 117 சில பல ஆண்டுகள் சென்றபின் இவள் மகனும் இதுபோன்ற தகராறில் மாட்டிக்கொண்ட பின்னரே, அல்லது இவள் அண்டியுள்ள உயர் மதிப்புள்ள வீட்டாருக்குச் சமமான பொருளாதார மதிப்புடன் மகள் வந்து, அவர்கள் அங்கீகரித்த பின்னரோ, ஒருகால் இவள் ஏற்கக்கூடும். உயர்குலத்துப் பெண் தாழந்து போனால், எவ்வளவு பெரிய சீர்திருத்தவாதியும் மனம் சுருங்காமல் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில், இந்தியக் கலாச்சாரம் என்பது இத்தகைய உயர் பெண்களின் வாழ்க்கைச் சுதந்திரத்தில்தான் பின்னிக் கிடக்கிறது என்றால் பொய்யில்லை. இவளுடைய ஒழுக்கத்தில்தான் அது நிலைகொண்டிருக்கிறது. அந்நாளில் அருச்சுனனுக்குப் போர்க்களத்தில் கண்ணன் உபதேசம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்தப் போர்க்கள உரை, இன்றளவும் இந்துக்களின் தெய்வீக வேத நூலாக சத்தியப் பிரமாணமாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்திய ஆன்மீகத் தத்துவம் என்றால், உடனே கீதையைப் புரட்டும் அறிவாளரும் சான்றோரும்தாம் நினைவில் வருகின்றனர். இந்தப் போர்க்கள உபதேசத்துக்குக் காலம் காலமாக, பல வேத விற்பன்னர்கள், தத்துவவாதிகள், புதிய சித்தாந்தங்களை வகுத்தவர்கள், தத்தம் நோக்கில் உரைகள் எழுதியுள்ளனர். அயல் நாட்டிலிருந்து வந்த அறிவாளரையும்கூட இந்த நூல் கவராமலில்லை. உலக முழுதும் பல மொழிகளில் ஆக்கப்பெற்ற இந்த நூல், இந்துக்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுவதற்குறிய உயர்ந்த நூலாக விளங்குகிறது. இந்த நூலில் கண்ணனின் உரைக்குத் தோற்றுவாய் என்று கருதும் முதல் அத்தியாயத்தைப் படிக்கையில், ஒரு பெரிய உண்மை புலப்படுகிறது.