பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 காலந்தோறும் பெண் பொருந்தவில்லை. அவர்கள் வெவ்வேறு இனக் குழுவினருடன் சம்பந்தம் செய்துகொண்டனர். தம் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்ள வேற்று இனக் குழுவினரின் அடிமைப் பெண்களுடன் தொடர்பு கொண்டனர் என்பதைக் கண்டோம். கலப்பு வந்து சேராமல் இல்லை. ஆனால் நால்வகை வருணங்கள் உறுதியாக பிளவுபட்ட பிறகு, இந்த மேலான வருணத்தார் தங்கள் வருணங்களைக் கலப்பின்றி வைத்திருப்பதில் அதிகக் கவனம் செலுத்தினார்கள். இந்தக் காரணத்தினால்தான் மேல் அல்லது உயர் வருணங்களில் பிறந்து பெண்கள் மிக அதிகமாக அடக்கி ஒடுக்கப்பட்டனர். பகவத்கீதையில் நம் கருத்தைக் கவர்ந்து பிணிக்கும் இன்னும் சில கூறுகளும் பெண்களின் நிலையைத் தெளிவாக்குகின்றன. கண்ணன், ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களின் அடிப்டையில் நான்கு வருணங்களைப் படைத்ததாகக் கூறுகிறான். (அத்-4) இன்னும் அவனவன் தனக்குரிய (ஸ்வதர்மம்) தருமத்தைச் செய்தலே சிறந்தது. பரதர்மம் நன்கு இயற்றப்பட்டாலும், அதைக் காட்டிலும் தனக்குரிய தர்மம் மேலாம் என்றும் அறிவுறுத்துகிறான். (அத்-3) மேற்குறிப்பிட்ட முக்குணங்களின் இயல்பில், வருணங்களைப் பிரிவுபடுத்துவதைப் பார்ப்போம். ஸத்வ குணமுடையவர்களின் இயல்பு, அறிவையும் ஞானத்தையும் வேட்பதாகும். சாந்தம், மென்மை, தூய்மை, தியாகம் இவற்றின் பிறப்பிடமாம்-மேலாம் ஞான ஒளியையே உண்மையென வாழும் இவன் சாத்வீகமான நலம் பொருந்திய நல்லுணவை மிதமாக உண்பவன். இவனே மேலாம் வருணத்தினன். ராஜஸ் குணம், ஆசை, கோபம், வீரம், தோள்வலி, உடலால் திளைக்கக்கூடிய இன்பங்களை வேட்டல், காரம், உப்பு, உவர்ப்பென்ற உஷ்ண உணவுகளை விரும்பி உண்பவன்.