பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 123 வருண ஸங்கரம் என்ற கலப்புக்கள் நிகழாமலிருக்கவே, இவளைக் கட்டிப் போட்டாலும் காற்றையும், கதிரொளியையும் போல் இயல்பான ஆற்றல்களும், ஊக்கங்களும் முழுதும் கட்டுப்படுத்த முடியாதவை. இதன் விளைவே, இன்றும் ஒர் உயர் வருண நங்கை, தாழ்ந்த சாதிக்காரனுடன் மணவாழ்க்கை நடத்தப் போகிறாள். இந்தக் கலப்புக்களால் விளைந்த பிளவுகளே, சாதிகளும் மற்றும் பஞ்சமர் என்றும், வருணங்களில் சேராதவர் என்றும் குறிப்பிடப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் ஊகிக்க முடிகிறது. பெண் எவ்வாறு இந்தப் பிரிவுகளுக்குக் காரணி யானாள் என்று இன்னும் பார்ப்போம். 18. காப்பாளரும் கைவிடப்பட்ட கற்பரசிகளும் ஒரு திருமணம். மணமகள் நிலவைப் பழிக்கும் முகமும், கார்மேகம் ஒத்த கூந்தலும் என்று கவிகளின் வருணனைக்குப் பொருந்த விளங்குகிறாள். மணமகன் நல்ல கறுப்பு. இந்த ஜோடியைப் பார்க்க வந்தவர்கள் விமரிசனம் செய்யாமல் இருப்பார்களா? பெண் நல்ல நிறம், மாப்பிள்ளை அத்தனை 'பிள்ளை கறுப்பாக இருந்தால் என்ன? ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்? இப்படித்தான் பெண்களின் கருத்துட் பரிமாறல் நடக்கும். பெரிய ஆபீசராம் என்று முத்தாய்ப்பு வைக்கப்படும். பெண்ணும் பெரிய ஆஃபீசராக இருக்கலாம் ஆனால் அது முதன்மைப்படுத்தப்படுவதில்லை.