பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 காலந்தோறும் பெண் இதுவே எதிர்மாறாக இருக்கட்டும். பெண் கறுப்பாகவும், ஆண் சிவப்பாகவும், இருக்கட்டும். இந்தச் சேர்க்கை, பெண்ணுடன் வரும் ரொக்கம், தங்கம், வெள்ளி அந்தஸ்தில்தான் இணைந்திருக்கும். ஆனாலும், பெண் அட்டைக்கரி, அவன் ராஜாவாக இருக்கிறான். இந்த மூஞ்சிக்கு இப்படி ஒர் அதிர்ஷ்டமா? என்று பொங்கிப் பொருமுவார்கள், பெண்களே. இதிலும் இவள் குழந்தைகளைத் தன் வண்ணத்தில் பெற்றுவிட்டால், தொலைந்தது! சனியன் அம்மாவைக் கொண்டு அட்டைக்கரியாகப் பிறந்திருக்கு!” என்று இடிப்பார்கள். ஆண் கறுப்பாக இருந்து, அவனைக் கொண்டு பெண் குழந்தை பிறந்தாலும், அப்பாவைக் கொண்ட பெண் அதிர்ஷ்டமாக இருக்கும். கறுப்பாக இருந்தாலும் லட்சணம் என்று சொல்லிக் கொள்வார்கள். அவளுக்குத் திருமணமாகும் போதே எதிர்ப்படக்கூடிய பிரச்னை வேறு. = தந்தையின் மேலான ஆதிக்கம், ஒரு குடும்பத்தில் ஓங்கி யிருப்பதையே சமுதாயம் ஒத்துக்கொள்கிறது. பெண்ணும் வளைந்து ஏற்கிறாள். எனவே கலப்புக்கள் நேர்ந்து, வருணங்களின் நூல் பிடித்த ஒழுங்குகளும் பிளவுகளும் தாறுமாறான போது, பல்வேறு பிரிவுகள் தோன்றின. இந்தக் கலப்பு மணங்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டன. தந்தை உயர் வருணத்தினனாகவும், தாய் தாழ்ந்த வருணத்தில் பட்டவளாகவும் இருந்தால், அவ்வளவு மோச மில்லை. அது அனுலோமம். (அதாவது தலைமுடியைப் படிய அதன் போக்கில் வாருவது போன்றது) இந்தக் கல்யாணத் தினால், தந்தைக்கு இழுக்கல்ல. அவன் தன்னோடு இணைந்த தாழ்ந்த வருணத்தவளை, ஏழு தலைமுறைக்குப் பிறகு, தன் வருணத்தினவளாக ஏற்றுக்கொள்ள, சந்ததி ஏற்றம் பெறுகிறது.