பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 125 இவ்வாறு பிரிவுக்குள்ளான வகுப்புக்களை மனுஸ்ம்ருதி குறிக்கிறது. தந்தை தாய் கலப்பினம் பிராம்மணர் கூடித்திரியர் முர்த்த வளலிகத + 1 * வைசியர் அம்பாஷ்ட ++ சூத்திரர் நிஷாத கூடித்திரியர் வைசியர் மஹறிஷ்யா கூடித்திரியர் சூத்திரர் உர்கா | வைசியர் சூத்திரர் கரன | இந்த ஆறு பிரிவினரில், உயர்ந்த வருணத்துத் தந்தைக்கும் கடைசி வருணத்துத் தாய்க்கும் பிறந்த மக்களின் சாதியை நம்மால் இனம் காண முடிகிறது. நிஷாத் என்ற சொல் காடுகளில் வேட்டையாடித் திரிந்த இனத்தைக் குறிக்கிறது. அந்த இனத்தார் நாட்டிலிருந்தே விலகி நெருப்புக் கொடுப்போர் இல்லாமல் வாழ நேர்ந்திருக்கலாம். என்றாலும் இந்த வமிசத்தவர் அனைவருக்கும் ஏழு தலைமுறைக்ளுக்குப் பின் உய்வு உண்டு. ஆனால், “பிரதிலோமம்’ என்ற முறையில் தாய் உயர் வருணத்தவளாக இருப்பாள். பிரதிலோமம் (முடியைப் படியவிடாமல் எதிர்நோக்கி வாருவது போன்ற முறை) என்ற முறையில் அவ்வாறு கரை ஏற முடியாத உய்வில்லாத வீழ்ச்சி அது. இந்தக் கலப்புக்களில் பிறவி எடுத்த மக்கள் சமதாயத்தில் தான் பஞ்சமர் என்றும் அவருணத்தினர் என்றும் சொல்லக்கூடிய தாழ்த்தப்பட்ட இனம் தோன்றியது என்று ஊகிக்க முடிகிறது.