பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 127 நான்காம் வகுணத்தவர் 'பாரதர்’ என்ற இனக் குழுவில் தோன்றிய சுதரஸ் என்று கூடித்திரிய வம்ச மன்னனின் சந்ததியார் என்று, டாக்டர் அம்பேத்கார் தம் ஆய்வு நூலாகிய, 'சூத்திரர் யாவர்?’ என்ற ஆராய்ச்சியில் கருத்துரைக்கிறார். இந்த மன்னன் கூடித்திரியன்; வேள்விகளியற்ற இருக்கிறான். இந்த இனத்தினர், அரச பதவிகளில் வந்ததும் முதல் வருணத்தவரை இழிவுபடுத்தித் துன்பங்களுக்கு ஆளாக்கியதன் காரணமாக அவர்கள் இவர்களுக்கு உபநயனம் செய்ய மறுத்துப் பழிவாங்கியதால் நான்காம் வருணம் தோன்றியது. அவர்கள் மேலாம் நிலையிலிருந்து கல்வி உரிமையும் அதனால் சொத்துரிமையும் மறுக்கப்பட்டு கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டதால் மற்ற பிற வருணத்தவரைக் காட்டிலும் இவர்கள் மீது பகையும் வன்மமும் தோன்றி யிருந்தது. திருமணம் வருண பேதத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்த நிலைமை மாறி, பெண்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். டாக்டர் அம்பேத்காரின் இந்தக் கருத்து, பெண்ணின் அனைத்துச் சுதந்திரங்களும் பறிக்கப்பட்டதன் காரணங் களோடு இசையப் பொறுந்துகிறது. இன்றளவும் சாத்திர சம்பிரதாயங்கள் உயர் வருணப் பெண்களுக்கு மிக அதிகமான கேட்டை விளைவித்திருக்கின்றன. கல்வி, மற்றும் மேம்பாட்டு உரிமை முதல் மொத்த மனித உரிமைகளையே பறித்த ஒரு கலாச்சாரத்துக்குப் பெண்களைப் பூச்சிகளாக்கித் தீர்த்தது. இந்த மேலாம் வருண சமுதாயம், அந்நியர் வந்து ஆக்கிரமித்த போது அவளைப் பாதுகாத்ததா? வரலாற்றின் ஏடுகளைப் பின்னோக்கித் திருப்ப வேண்டும். ஏழாம் நூற்றாண்டில், அராபிய வர்த்தகர்கள் பாரத நாட்டை நோக்கி வரத் தொடங்கினார்கள். எட்டாம் நூற்றாண்டில் எலிந்து’ப் பிரதேசம் அவர்கள் வசமாயிற்று. வர்த்தகர்கள், முகம்மதிய ஆக்கிரமிப்பாளராக இந்துகுஷ்