பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 காலந்தோறும் பெண் அத்தகைய பத்தினிகளுக்குக் குறைவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கருத்தரங்குகளுக்குத் தலைமை வகித்தவர் ஒர் இராஜஸ்தானத்துப் பெண்மணியே. கவிஞர், சிறந்த அறிவாளர்; பரிஷத்தின் செயலாளரில் ஒருவர். அவரால் இதைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. 'இன்னமும் அத்தகைய சதிகள் இருப்பது பெருமையல்ல' என்று எழுந்தார்-அமைதியாகப் போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சியில் சலசலப்பு நேரிட்டது. விவாதம் முழுவதும் இலக்கியமான இந்தி மொழியில் நிகழ்ந்ததனால், என்னால் வெறும் பார்வையாளராகவே இருக்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அண்மைக் காலங்களில் சாக அடிக்கப்பட்ட அந்த மரபை, உயிர்த்தெழச் செய்த சதி தர்மத்தை நிலைநாட்டும் நிகழ்ச்சிகள் இராஜஸ்தானம், மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் பாரதத்தின் புகழைப் பரப்பிக் கொண்டிருக் கின்றன. அதுவும் போதாதென்ற வகையில், வரதட்சணை சீர்’ என்ற சாக்கில், இளம்பெண்களை நாடு முழுதுமான எல்லாப் பகுதிகளிலும் உயிருடன் தீக்குளிக்கச் செய்தும் சதிகளுக்கான சொர்க்கத்துக்கு இந்த இருபதாம் நூற்றாண்டின் இந்துச் சமுதாயம் அனுப்பிக் கொண்டிருக்கிறது. அதில், சந்தனம் முதலிய வாசனைக் கட்டைகள் இல்லை; ஸ்டவ், பெட்ரோல், எரிவாயு என்ற நவீன சாதனங்கள் அப்பணியைச் செவ்வனே செய்கின்றன. எனவே, இந்த சதி தர்மத்தைப் பற்றியும் இப்போது ஆராய்வது உகந்தது என்று கருதுகிறேன். அந்நியர் ஆக்கிர மிப்புக்கு உட்பட்டால், அரச மாளிகையில் இருந்து நடுவீதிப் புழுதியில் வீழ்ச்சியுறும் நிலையை உணர்ந்திருந்த பெண்கள் பகைவர் நாட்டில் புக மன்னர் இடம் கொடுத்துவிட்டனர் என்ற நிலையிலேயே எரி வளர்த்துப் புகுந்து தம் மானத்தைக் காப்பபாற்றிக் கொண்டனர். சித்துார் ராணி பத்மினியின் வரலாறு பொன்னேட்டில் துலங்குவதாகும்.