பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 131 இவ்வாறு பத்தாம் நூற்றாண்டில் பெண்கள் தம் மானம் காக்க வழக்காக்கித் தீர்ந்த தீக்குளிப்புகள், பாதிவிருத்யம், சதி என சர்க்கரைப்பாகில் தோய்க்கப் பெற்றன. இந்நாட்டின் பெண்களைக் காப்பாற்ற இயலாத முதுகெலும்பற்ற முடிமன்னர் வருக்கத்தில் மன்னர் இறந்ததும், மன்னரின் பெருமையை உலகரியச் செய்ய அவருடைய பட்டத்து மனைவியருடன், அந்தப்புரத்தில் சிறைப்பட்டிருந்த கிளிகளும் கூடச் சிதையில் ஏற்றப்பட்டார்கள். யாருமே ஏறுவதற்கில்லை எனினும் சில அடிமைப் பெண்களையேனும் பிடித்துச் சிதையிலேற்றி மன்னர் மதிப்பைக் காப்பாற்றினார்கள். இவ்வாறு அரசருக்குரிய கூடித்திரிய வருணத்தாரிடமே இந்த 'சதி தீக்குளிப்பு வழக்கில் பரவியது. மேலாம் வருணத்தினர் தங்களை மீறி இரண்டாம் வருணத்தினர் பெண்களைச் சதியாக்கிப் பெருமைப்படுவதைப் பொறுப் பார்களா, ஆதியில் கெளதமர் என்ற ரிஷி 'பிராம்மணி தற்கொலை செய்துகொண்டால், தனக்கோ கணவருக்கோ சுவர்க்கம் தேட முடியாது’ என்று சொல்லி வைத்திருந்ததைக் கூட, மாற்றினார்கள். பிராமண (ஹத்தி) ஸ்திரீஹத்தி என்ற பாவம் அழிக்கப்பெற்று, புண்ணிய நெறியாக மாற்றப்பட்டது. இதை ஊக்குவிக்கும் வகையில், முன்பு ஸ்திக்கு விரோதமாக எதுவும் சொல்லாதிருந்த முனிவர் பெருமக்களைத் தேடிப் பிடித்தார்கள். அவர்கள் திருவாய் மலர்ந்தருளியதாக சதி சாத்திர நெறி வகுக்கப்பட்டு பறையடிக்கப்பட்டது. அறிவு குருடாக்கப்பெற்ற அபலைகளை எரியில் தள்ளி, அவர்களை ஆசைகாட்டிய வாசகங்கள் இவை: 1. கணவனுடன் சிதையடுக்கி, உடன்கட்டை ஏறும் பெண், அருந்ததிக்குச் சமமாகப் பத்தினிகளுக்குரிய சுவர்க்கம் புகுகிறாள். -