பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 133 மேற்கூறிய ரிஷிமுக வாசகங்கள் எப்போது, எப்படி உதித்தன என்பதற்கெல்லாம் விளக்கங்கள் தேடுவது சிரமமான செயல். ஆனால் தேடினால் எதை எதையோ கண்டுபிடிக்கலர்மாகவும் இருக்கும். ஏனெனில் பெண்ணின் கீழ்முக வரலாற்றை ஆராய முடியாதபடி, தெய்வீக வேத முத்திரைகள் என்ற இட்டு வித்தபின், புராணங்கள் என்ற புனைகதைக் களஞ்சியங் களையும் ஆதாரமாக்கிக் கொள்ள இப்புளுகுகளைக் கொட்டி நிரப்பி வைத்தார்கள். இந்த வகையில், பிரும்ம புராணம் சொல்கிறது : 'கணவன் வேற்று நாட்டில் இறந்தால், உத்தம பத்தினி அவனுடைய காலணிகளை மார்பில் வைத்துக்கொண்டு அக்கினியில் புகுவாள்!" பெற்றுப் பேணி, தன் நிணத்தையும் குருதியையும் தோய்ந்து ஆணினத்தை வாழ்விப்பதையே நெறியாகக் கொண்டிருந்த பெண்ணினத்தை, இவ்வாறு வஞ்சக வார்த்தைகளால் கரைத்து உயிரோடு நெருப்பிலிடும் கொடுமை “சதி” என்ற பெயரில் பல நூற்றாண்டுகளுக்கு ஏனென்று கேட்பார் இல்லாமல் நடைபெற்றது. இராஜாராம் மோஹன்ராய் தோன்றி, இக்கொடுமைக்கு சமாதி கட்ட அரும்பாடு பட வேண்டி இருந்தது. ஆங்கிலேயே அரசின் ஆதரவைப் பெற ஆன பாடும் பட்டது. வேதம் என்றும் புராணம் என்றும் புளுகுகளை அவிழ்த்துவிட்டு நியாயம் தேடிற்று. அவர்களைப் பார்த்து ராஜாராம் மோஹன்ராய் கேட்டார்: “கணவனை இழந்தவள் தானாகவே சங்கற்பம் செய்து கொண்டு உடன் கட்டை ஏற வேண்டும் என்பதுதானே விதி? உங்கள் வழிக்கே வருகிறேன்; ஆனால் நீங்கள் மரித்த கணவனுடன் அவளை உயிரோடு கயிறு கொண்டு பிணைக்கிறீரே? பின்னர், அவளை வைத்து மேலே சிதை