பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. வரதட்சணை மகாத்மியம் தமிழ் நாட்டில் இலக்கியம், மக்கள் ரஞ்சகப் பட்டி மன்றங்கள் இந்நாள் வரையிலும் கண்ணகியின் கற்பையும் மாதவியின் கண்ணியத்தையும்தான், கல்லில் அடித்து வைத்துக் கொண்டிருந்தன. இந்நாட்களில் பட்டி மன்றங்களில் சுவை கூட்ட மேலும் பல தலைப்புகள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, வரதட்சணைக்குக் காரணம் ஆனா பெண்ணா என்பதாகும். அண்மையில் ஒரு வரதட்சணை எதிர்ப்பு விழா (?) வுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. கருத்தரங்கில் ஒரு நுண்ணறிவாளர், இந்தியாவில் வரதட்சணைக்குக் காரணம், ஒர் ஆணுக்கு ஏழு என்ற விகிதத்தில் பெண்மக்கள் தொகை இருப்பதாகும் என்று கருத்துரைத்தார். இன்னொருவர், பெண்ணுக்குச் சொத்துரிமை கிடைத்துவிட்டால் இந்தப் பேய் அடியோடு அழிந்துபோகும் என்றார். (சொத்து இல்லாத குடும்பங்களில் பிறந்த பெண்களைப் பற்றியோ, கடன் உள்ள குடும்பங்களில் பிறந்த பெண்களைப் பற்றியோ, அவர் நினைத்துப் பார்க்கவில்லை.) பட்டி மன்றத்தில், வரதட் சணைக்கு ஆணே காரணம் என்று முழக்கமிட்ட பெண்ணை எதிர்த்துப் பேசிய இளைஞர், வரதட்சணை வாங்கித்தானாக வேண்டும் என்று நிபந்தனைகள் விதிப்பது மாமனார் அல்ல, மாமியாரே சகோதரன் மனைவியைக் கொடுமைப்படுத்துவது நாத்தனாரே, பையன் தன் தாய் சொல்லைத் தட்ட முடியாமல் சங்கடப்படுகிறானே ஒழிய அவனே வரதட்சணை கேட்ப தில்லை என்று விளக்கினார். அதிரடிகளும், எதிரடிகளுமாகப் பட்டிமன்றம் கலகலவென்று களை கட்டியது. முடிவில் நடுவர்