பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 137 வரதட்சணைக்குக் காரணம், ஆண்களும்தான், பெண் களும்தாம் என்று தீர்ப்புக் கூற இரு அணிகளும் தம் தம் வாதிடும் திறமையில் நம்பிக்கையுடன் மகிழ்ந்தார்கள்! விழா இனிது நிறைவேறியது. கேட்டுக்கொண்டிருந்த எனக்கு, சிந்தனை எங்கெங்கோ போயிற்று. பெண்ணுக்கு அவள் சொந்த மானுட மதிப்புக்கு மேல் ஒட்டிக்கொள்ளும் பொன்னும் பொருளும் அவளையே வெற்றுக் கூடாக்கிவிட எப்போது உரிமை பெறத் தொடங்கின? ஆணும் பெண்ணும் கூடி மகிழ்ந்து இனம் பெருக்க மக்களைப் பெறுவது என்று இருந்த நிலையில் சமுதாயக் கட்டுக்கோப்பான நாகரீக மலர்ச்சி எய்தியதும், திருமணங்கள் தோன்றின. மனுவின் பெயரால் தொகுக்கப்பட்ட நெறிமுறை களில் எட்டு வகைத் திருமணங்கள் காணப்படுகின்றன. 1. பிரும்ம விவாகம், 2. தெய்வ விவாகம்,3. பிராஜாபத்ய விவாகம், 4. அர்ஷ விவாகம், 5. ஆசுர விவாகம், 6. காந்த ருவ விவாகம், 7. ராட்ஸ் விவாகம், 8. பைசாச விவாகம் என்பவை அவை. 1. பிரும்ம முறை: நாற்பத்தெட்டு ஆண்டுகள் பிரம் மச்சரியம் காத்த பிராம்மணனுக்கு அதே வகுப்பில் உதித்த பண்ணிரண்டாண்டுகளே நிரம்பிய பெண்ணை இரண்டாம் பூப்பெய்து முன், அணிகலன்களுடன் கொடையாக நீர் வார்த்துக் கொடுக்கும் விவாகம் இது. இந்தத் தம்பதிக்குப் பிறக்கும் மகன் இருபத்தோரு தலைமுறையினரைக் கரையேற்ற Յ)ԱՅՆ)GՆ) Յ) /3 մT 2. தெய்வ முறை: வேள்வி நடத்தும் ஆசிரியருக்கு வேள்வித் தீயின் முன், மகளைத் தாரை வார்த்துக் கொடுப்பதாகும். இந்த மணத்தில் உதிக்கும் புதல்வனால் பதினைந்து தலைமுறையினர் ஈடேறுவார்.