பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 காலந்தோறும் பெண் 3. பிரஜாபத்திய முறை: மணமகன் வீட்டார் கொண்டு வந்து கொடுக்கும் பரிசுப் பொருள்களைப்போல் இருமடங்கு சேர்த்துப் பெண்ணுக்குக் கொடுத்து மணமுடித்தலே இந்த முறை. இந்தத் தம்பதி பெறும் மகன் பதின்மூன்று தலை முறையினரைக் கரையேற்றுவான். 4 அர்ஷ முறை. ஒரு காளை, ஒரு பசு இரண்டையும் பெற்றுக்கொண்டு பெண்ணை மணமகனுக்கு உரியவளாக்கிக் கொடுத்தல். இந்த மணமக்கள் பெறும் ஏழு தலைமுறை யினரின் கரையேற்றத்துக்கு உத்தரவாத மளிக்கிறான். இந்த நான்கு முறைத் திருமணங்களும், உயர் வகுப்பினராகிய பிராம்மணருக்கு உரியதாம். இந்த முறைகளில் காளையையும் பசுவையும் பெற்றுக்கொண்டு மகளை தாரைவார்த்துக் கொடுப்பது, மகளை விற்பதற்குச் சமமாகும் என்று மனுவே, (எந்த மனுவோ) கண்டனம் செய்ததான குறிப்பும் இருக்கிறது. 5. ஆசுர முறை: வில்வித்தை, ஏறு தழுவுதல் போன்ற பராக்கிரமச் செயலால் பெண்ணைப் பரிசமாகப் பெறும் மணம். 6. காந்தர்வ முறை: வயது வந்த ஆணும் வயது வந்த பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பித் தாங்களாகவே மணம் புரிந்துகொள்ளல். 7. இராட்சஸ முறை: பெண்ணுக்குத் தெரிவிக்காமலே, ஒருவன் கவர்ந்து சென்று தானே மணக்கலாம் அல்லது பிறருக்கும் மணமுடிக்கலாம். 8. பைசாச முறை: இது முறையான திருமணமன்று. மணமகனைவிட மூத்தவளாகவோ கள்ளுண்ட நிலையிலோ உறக்க நிலையிலோ விருப்பத்திற்கு மாறாகவோ பலாத் காரமாகப் புணர்ந்து உரியவளாக்கிக் கொள்ளுதல்.