பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 141 முடித்துவிட வேண்டும் என்று ஆயிற்று. எனவே, இந்த முறை ‘எதிர் ஜாமீன்' என்ற சொல்லால் குறிக்கப் பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. மகளை மணமுடிக்க வருபவன், வரன். இவனுக்குப் பெண்ணைத் தானமாகக் கொடுப்பதுடன், "தட்சணை’ என்று கூட ஒரு பொதியையும் கொடுக்கும் வழக்கம், ஆண் ஆதிக்கம் மேலோங்கி, பெண் சகல உரிமைகளையும் இழந்த சூழ்நிலையில்தான் பரிபூரணமாகிறது. எப்படியாயினும், முகம்மதியர் வருகை குறிப்பாக தென்னிந்தியாவில் திருமண வழக்கங்களைப் பாதித்திருக்கிறது. முகம்மதியப் படைவீரன், மாற்றான் மனைவியைத் தொடமாட்டார்கள்; அத்த வகையில் ஒரு பெண் திருமணமானவள் என்று அறிவிப்பதற்கே தாலியைக் கழுத்தில் கட்டினார்கள் என்ற ஊகத்துக்கு இடம் உண்டு. பழந்தமிழர் மரபில் கூட இந்தச் சின்னம் தெளிவாகக் குறிப்பிடப் படவில்லை. எதிர் ஜாமீன் என்ற வழக்குச் சொற்றொடர் ஆய்வுக்குரியது என்று படுகிறது. எப்படியோ, பெண்ணின் சார்புநிலை திருமணத்தினால் தான் உறுதிப்படுகிறது. அவள் தானே நிற்க முடியாது, உறுதி யற்ற பெண் கொடி, பைங்கொடியானாள். கொழு கொம் புக்கு அவள் தனது சகலத்தையும் உரித்தாகத் தீர வேண்டிய தாயிற்று. இன்று, வரதட்சணை அல்லது எதிர் ஜாமீன், ஆதி மரபுகள் சொச்சமிச்சமாக ஒட்டியிருந்த சமுதாயங்களிலும் பெண்ணின் மனித மதிப்பை அடியோடு துடைத்துவிட்டது. அது கர்ப் பத்திலிருக்கும் சிசுவை இனம் கண்டு அழிக்கும் அளவுக்கு நம்பிக்கை வேரையே தின்று கொண்டிருக்கிறது. கர்ப்பத்தில் வளரும் சிசு ஆணாக வலிமை பெற மந்திரங்கள் தோன்றிய அதர்வ வேத காலத்தில் தொடங்கி, இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்திலும், அந்தப் பெண்ணின் மனித மதிப்பு ஏறிவிடாமல் முழ முழமாய் சறுக்கி இன்று