பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 143 போகாமல், அன்றுதான் புதிதாய்ப் பார்ப்பது போல் ஒர் ஆவலையும் ஐயப்பாட்டையும் தேக்கி, ஈர்க்கக்கூடிய செய்தி எது என்று கோடிட்டுக் காட்டச் சொன்னால். ஒரே ஒரு செய்திதான் சட்டென்று நினைவில் முட்டி வரும். பெண் பார்க்கும் படலம்தான் அது. இப்போதெல்லாம் தொலைக்காட்சிச் சித்திரங்களில் பெண் தொடர்பான முன்னேற்றக் கருத்துக்களைச் சொல்வதற்குரிய ஒரு களம் என்ற வகையில் பெண் பார்க்கும்’ நிகழ்ச்சிகளே, முதலிடம் பெருகின்றன. அவள் சிங்காரித்துக்கொள்வதும், இந்த ஒப்பனைகளில் தேற வேண்டுமே என்று, மிகப் பெரிய போட்டித் தேர்வில் வென்று, முதல் தர உத்யோகத் தகுதியைப் பெற்ற பெண்ணும் பலவீனத்துக்காளாவதும் இக்காட்சிகளில் இடம்பெற்றிரா விஷயங்களில்லை. “ஒ, பெண் கொண்டு வந்த காபி, பிரமாதம்” என்று பிள்ளையோ பிள்ளை வீட்டாரோ பாராட்ட, “எங்கள் பெண்ணே தயாரித்த காபி!” என்று தாயும் தந்தையும் பெருமைப்பட, பெண், பூபாரம் அழுத்த தலை குனிந்து, “எல்லாம், சிங்கம் மார்க் காபித்துள்ளின் மகிமை!” என்று அசட்டுச் சிரிப்பு எட்டிப் பார்க்கச் சொல்வதும், இன்றைய நவீன தொலைக்காட்சி விளம்பர உத்திகள். சோப்பு. சீப்பு, பற்பசை, துணி ஈடான பல பயன்படு பொருள் களுக்குமேல், கடலைமாவு, சமையலெண்ணய் பிசுக்குப் போக்கும் துரள்வரை அத்தனை பொருள்களையும் இவ்வாறு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி, அவளும் ஒரு பயன்படு பொருளே என்று அஃறினைக் கூட்டத்தில் தள்ளப்படுவதை அவளே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறாள். எனவே திருமணம் என்று வரும்போது ஒவ்வொரு பெண்ணும் காட்சிப் பொருளாகப் பரிசோதனைப் பொருளாக மாறும் ஒர் அவல நிகழ்ச்சி, முன் எந்தக் காலத்தைக் காட்டிலும் இந்நாட்களில் முக்கியமாக இடம் பெற்று இருக்கிறது. வீட்டில் மூத்த தலைமுறை ஆண்கள் மூன்றாம் தலைமுறைச் சிறுமிக்குத் திருமணம் நிச்சயித்த காலங்களில் இத்ததைய பரிசோதனைகள்