பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 காலந்தோறும் பெண் வருவதாக இருக்கும். இதனால் இந்தப் பெண் கொள்வதற் குரியவள் அல்ல. நாற்சந்தி மண்ணைக் கொண்டு வருபவள், அலைபாயும் மனதுடையவளாக இருப்பாள். இவளும் தவிர்க்க வேண்டியவளாகிறாள். வறண்ட பாலை மண்ணை எடுத்து வருபவள்தரித்திரத்தைக் கொண்டு வருவாள்; அதனால் இவள் வேண்டாம். சுடுகாட்டு மண் அவள் கைகளில் ஏறுமானால், அந்தோ, இவள் கொண்டவனுக்கு யமனாவாள்! இவள் மிதிக்கும் மண்ணே தகாதது. இந்த மண்ணுருண்டைகள், அவளுடைய மண வாழ்வை நிர்ண யிப்பது போன்று, கணவனைத் தேர்ந்தெடுக்க அவளுக்கு எந்த, ஒரு வழியும் இல்லாமலாகிறது. இதே மண்ணுருண்டைப் பரிசோதனையை அவனுக்கு அவள் வைக்க முடியுமா? தேர்ந்தெடுக்கும் உரிமை காலம் காலமாக அவனுக்கே இருந்து வருகிறது. நீர் நிறைந்த குடத்தை இடுப்பிலேற்றி வரச் செய்தல்; சுண்ணாம்பு கொண்டு வரச் சொல்லல் என்ற பரிசோதனைகள் இருந்த இடத்தில், பாடத் தெரியுமா, ஆடத் தெரியுமா, ஆங்கிலம் பேச வருமா என்ற வினாக்கள் எழுந்தன இக்காலத்தில். வங்கியில் அல்லது வேறு இடங்களில் நிரந்தரச் சம்பளத்தில் வேலை செய்பவளாக, குடும்பப் பாங்கானவளாக, அடக்கமுள்ளவளாக என்ற விதி முறைகள் வீசப்படுகின்றன. அக்காலத்தில், திருமணம் என்பது, ஆணுக்கு எல்லா வசதிகளையும் கொடுக்கக்கூடியவளாக, அதே வம்சம் விளங்க ஆண் மக்களைப் பெற்றுத் தருபவளாக ஒரு பெண்ணைத் தன் ஆளுகைக்குக் கொண்டு வரும் சடங்காகத்தான் இருந்தது என்றால் தவறில்லை. பெண்ணின் அறிவைக் காட்டிலும், அவள் உடலமைப்பும், மென்னையான குணங்களுமே வேட்கப்பட்டன. பிறிதொரு இடத்தில், “நன்னடத்தையும், அளவான அவயவங்களின் இசைவும், மென்மையான கூந்தலின் இரு