பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 149 சுருண்ட பிரிகள் வலதுபுறக் கழுத்தில் நீண்டு இருக்கும் படியுமான பெண்ணின் கையைப் பற்றும் ஆணுக்கு அவளால் மகிழ்ச்சி உண்டு; சந்ததி விளங்கும். கையைப் பற்றும்போது, அவளுடைய கட்டைவிரலைத் தன் பிடிக்குள் வைத்துக் கொள்ளும்படி பற்ற வேண்டும். ஆறு ஆண்மக்களை இவள் பெற்றுத் தருவாள்” என்று காணப்படுகிறது. ருக் வேதத்தில், ஆதிப் பகுதிகளில், பெண் குழந்தைகளை விரும்பாத நோக்கு எதுவும் புலப்படவில்லை. ஆனால் அதர்வ வேதத்தில், கருவில் இருக்கும் பிண்டம் ஆணாக இருக்க வேண்டும், பெண்ணாக இருக்கலாகாது என்று வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனை இடம் பெறுகிறது. பிள்ளை இல்லையே என்ற குறை தீர்க்க வேண்டும் பிரார்த்தனைகளிலெல்லாம், 'ஆண் மகவு பிறக்கட்டும்’ என்ற வேண்டுதலையே மேலேங்கி நிற்கிறது. திருமண நோக்கமே இதுதான். ஆண்பிள்ளைகளை அவள் பெற வேண்டும்! 22. சுமங்கலியும்-பத்துப் புத்திரர்களும் 'எ. மங்க2ை /72ம் வதுர72ம72ம் எவமேத பசி த ைெனப7க் மண் ைதத்வ/2/7 2/7ண்தம் விபரேதன.' 'தச7ண்2/7ம் புத்ர7ன7ம் தேஹவி உதி2ம் ஏகாதசம்க்ருதி' விவாஹ மஹோத்வைத்திவே. மகா ர7ஜ ர7ஜ ஆறு. அவர்கள் ஆசீர்வாதம், பெண்ணுக்கு லட்சம் கட்டி வராகன். பட்டுப் புடவை, பட்டு ரவிக்கை. (அல்லது பிரஷர்