பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 151 கூத்தாகக் கொள்ளும்படி முக்கியத்துவம் இழந்துவிட்டன. இது எந்த அளவில் மணமகனையும் மணமகளையும் ஆன்மீக ரீதியாகப் பிணிக்கிறது என்பது ஐயத்துக்குரியது. ஆனால், இந்த மந்திர வாசகங்கள், சில சடங்குகள், புரோகித வருக்கத்தைக் காப்பாற்றுவது போல், கேலிக் கூத்தான நிலையிலும் பொருள் பிரித்துக் காண மனமின்றி, கெட்டியாகப் பற்றிக்கொண்டு, அந்தப் பிடியின் மாயையில் பெண்ணின் அறிவைக் குழப்பும் செயலைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றன. “ஸ்-மங்கலி ரியம் வது” என்று தொடங்கும் முதல் இரண்டு வரி வாசகமும், மிக மிகத் தொன்மையான ருக் வேதப் பாடல்களில் காணப்படுபவை. சூர்யா என்ற மணமகளுக்கும், ஸோமா என்ற மணமகனுக்கும் நிகழ்வதாகக் கற்பிக்கப்பட்ட திருமணத்தில் கூறப்படும் மொழிகளாகும். சொல்லப் போனால், ருக்வேத கால மகளிரின் சமுதாய நிலை, திருமணம் போன்ற விவரங்களைப் பற்றிய சான்றுகளை, இத்தகைய பாடல்களின் வாயிலாகவே அறிகிறோம். மேற்கூறிய வாழ்த்து வாசகம் இடம்பெறும் நிகழ்ச்சிதிருமணம். மணமகள் தன் மணாளனின் கரம் பற்ற, அலங்கரித்துக் கொண்டு, சான்றோர் பெருமக்கள் நிறைந் திருக்கும் அவைக்கு வருகிறாள். முதல் இரண்டு வரிகளான ‘ஸ்-சமங்கலி ரியம் வது ரிமாம் ஸ்மேத பச்யத ஸெளபாக்ய மஸ்யை தத்வாயா யாஸ்தாம் விபரேதன” என்ற மொழிகளின் பொருள், எல்லா மங்கலங்களும் பொருந்திய இந்த மணப் பெண்ணைப் பாருங்கள்! நீங்கள் யாவரும், இவளுக்கு எல்லாப் பேறுகளும் இசையட்டும் என்று வாழ்த்தி விடை பெற்றுச் செல்லுங்கள்!” என்பதாகும். இங்கு காணப்பெறும் ஸுமங்கலி என்ற சொல்லை முதலில் நாம் பார்க்கலாம்.