பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 157 செய்ய வேண்டும். இடம் துப்புரவு செய்து, கோலமிட்டு, பொருட்களைச் சுத்தமாக்கி வைத்து, கடினமாக உடலுழைப்புப் பணியை அவளே செய்ய வேண்டும். அத்துடன், அவளுடைய பங்கேற்பாக, ஒரு சில சலுகைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. குடும்பப் பெண்களுக்கு முறையான கல்வியும் கலைப் பயிற்சியும் மறுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களாகச் சமையலறை எல்லைக்குள், சில தோத்திரங்களும் பாடல்களும் பாடுவதற்கு அநுமதிக்கப் பெற்றிருந்தார்கள். வாழ்க்கையே முடக்கப்பட்ட நிலையில் மூலையில் இருந்த சில பெண்கள் அவர்கள் எல்லைக்குள் மீனாட்சியம்மன் கல்யாணம், பார்வதியம்மன் சோபனம் என்று பாடல்களைப் பாடி ஆறுதல் பெற்றிருக்கிறார்கள். இந்தப் பாட்டுத் திறனுடன் ஒருத்தி சுமங்கலியாக, (கட்டுக்கழுத்தியாக) இருந்தால் அவளுக்குத் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் ஒரு பெருமை கூடும். வேத வாசகங்கள், மேள தாளங்களுக்கிடையே புரோகிதரின் குரல் ஒலிக்கும். “பெண்கள் பாடட்டும், கெளரி கல்யாணம் பாடட்டும்!” இந்த அடிமை வருக்கத்தினரின் குரல், மங்கள ஒலி என்ற மினுக்கைப் பெற்று, அவையில் ஒலிக்கப் பெறும் சலுகை! இது திருமண விழாவுக்கு மட்டுமல்ல புதுமனை புகுவிழாவோ, காதுகுத்துக் கல்யாணமோ, பூணுால் சடங்கோ, ஆண் குழந்தையின் அட்சராப்பியாச விழாவோ, எதுவா னாலும் “பெண்கள் பாடட்டும்...! “கெளரி கல்யாணம்’ பாடட்டும்!” என்ற ஆணை வரும். எங்கோ மூலையில் இருந்து சுருதி இராகம் என்ற எந்த ஒழுங்கான பயிற்சியும் இல்லாத கிழக்குரல் ஒன்று ஒலிக்கும். 'ഠ'ീഴ്ത്തന്നീ ധ്രഥ ഔഖാ.ീ வசதேவகு ைப7வ அகரகு ைவைr