பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 காலந்தோறும் பெண் "தற்கொண்டான் பேணி என்ற தொடரே, ஒருவனுக்கு உடமைப்பொருளாவது நியாயப்படுத்தப்படுகிறது. 'மூத்த பொய்ம்மை’ என்ற சொற்றொடரே மனசில் மின்னுகிறது. ஒர் ஆணைச் சார்ந்து அவனில் தன்னைக் கரைக்க, உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழக்க வேண்டும் என்ற ஒரு பக்க நியாயம் நெறியாக இந்தப் பெயர் பெற்ற உலகப் பொதுமறை நூலில் வலியுறுத்தப்படுகிறது. பெண்ணின் முழு அறிவு, ஆற்றல், ஆளுமைச் சிறப்பு எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது கற்பு நெறி, என்ற அழுத்தமான ஒர் ஒழுக்க வளையம்தான் என்பது கூர்ந்து சிந்தித்தால் புலனாகிறது. மணவாழ்வு என்பது, வாழ்வின் இன்பங்களும், பயன்களும் ஆணுக்கே உரித்தாக்கி அதன் கடுமைகளையும், துன்பங்களையும் பெண்ணுக்கு உரியவை என்று ஒதுக்கிவிடும். ஒரு நெறியைப் பெண்ணிற்கு விதிக்கிறது. இந்த விதிக்கு மாறாக அவள் நினைத்தாளேயானால், கற்புக்குப் பங்கம் விளைவித்துக் கொள்கிறாள். பெண்ணுக்கு உயிரையும் விடப் பெரிதாகப் போற்றிக் காக்க வேண்டியது இந்த ஒழுக்கப் பண்பு என்பதை விளக்க, எத்தனையோ கதை, புராணங்கள், வழக்கங்கள், சடங்குகள் அவளுக்கு வலியுறுத்தப்படுகின்றன. குரூபியான கணவன், தொழுநோய் கண்டு அழுகிச் சொட்டுபவன், அவளை அடித்து இம்சித்து நாள்தோறும் அவள் கண்முன் வேறொரு நங்கையுடன் குலாவுபவன், அவள் நலங்களனைத்தையும் சூறையாடி அவளைச் சக்கையாக உதறிவிட்டுக் காணாமல் மறந்து போனவன், என்றெல்லாம் கதைகளில் வரும் கணவன் மார்களை, அவர்கள் மனைவியரான கற்புக்கரசியர், கடைசி வரையிலும் தெய்வமாகத் தொழுது பணி செய்வர். அவன் உதறினாலும் அவன் காலடியில் அழுது கரைந்து, கெஞ்சி அடிமையாக ஏற்றுக்கொள்ள நிற்பர். இக்கற்புக்கரசியர் கணவன்