பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 காலந்தோறும் பெண் சிரஞ்சீவியாக்கியிருக்கிறது. இவன் பூத உடலுடன் சொர்க்கம் செல்ல விரும்ப இவள்மீது அளவற்ற அபிமானம் கொண்ட குரு விசுவாமித்திரர், இவனுக்காக ஒரு சொர்க்கத்தையே நிறுவினாராம். இவள் நிலை அங்குமில்லை இங்குமில்லை என்ற தனித்துவம் பெற்றது. இந்தத் திரிசங்குவின் ஆதிப் பெயர் சத்யவிரதன் என்று தெரிகிறது. இவருடைய தந்தையாகிய மாமன்னனும், குருவாகிய வசிஷ்டமாமுனியும் நெருங்கிய நண்பர்கள். அரசகுமாரன் சத்தியவிரதன், நகரில் உள்ள ஓர் இளம் பெண்ணைக் கண்டு மையல் கொண்டான். அவளைப் பலவந்தமாகக் கடத்திச் சென்றான். அந்த இளம்பெண், மணமானவள். இன்னொருவனின் மனைவியை விரும்பிய துடன் மட்டுமின்றி, அவளைக் கவர்ந்து சென்றது குற்றம் என்று அவளை நாடு கடத்தினான் தந்தை. ஆனால் சத்யவிரதன், அவள் மாற்றான் மனைவியாகித் தீர்ந்து விடவில்லை; ஏனெனில் அவள் சப்தபதிச் சடங்கு நிறைவேறு முன் அதாவது மந்திரத்தின் கடைசி அடியைச் சொல்லுமுன் அவளைக் கொண்டுவந்ததால், தண்டனைக்குரிய குற்றத்தைத் தான் செய்துவிடவில்லை என்று வாதாடினான். இது வசிட்ட முனி அறிந்த நீதிதானே? அவர் இவனுக்காகப் பரிந்துரை செய்யாமல் வாளா இருந்தது கண்டு சத்யவிரதன் கடுங் கோபமுற்றான். விசுவாமித்திரர் கடுந்தவசில் ஆழ்ந்த அச்சம யத்தில் அவர் மக்கள் வறுமையினால் வருந்த சத்யவிரதன் கானகத்தில் அவர்களைக் காப்பாற்றி, விசுவாமித்திரரின் மட்டற்ற அபிமானத்துக்கு உரியவனானதாகப் புராண வரலாறு தொடருகிறது. இவன் மூன்று பாவங்களைச் செய்த தால் 'திரிசங்கு’ என்ற பெயர் பெற்றதாகவும் குறிப்பிடப் படுகிறது. இந்த வரலாற்று, முக்கியமாக 'சப்தபதி என்ற திருமணச் சடங்கைப் பற்றிய விபரம் காண்கிறோம். ஒமத்தீயைச் சுற்றி