பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 167 இந்நாள், இச்சப்தபதி மந்திரத்தையும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு தாலிகட்டுச் சடங்கு அவளை வாழ்நாள் முழுதும் உணர்வு ரீதியாகவும், பிணித்துக் கொண்டிருக்கிறது. 24. வினா - விடை - அச்சுறுத்தல் அர்மார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன், அறிவியல் தொழில் நுட்பப் பட்டம் பெற்று, அருகிலுள்ள தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் ஒன்றில் ஆசிரியப்பணி ஏற்க வந்திருந்தாள். அந்த நிறுவன வளாகத்தில், பெண் ஆசிரியைகளுக்கான தங்கும் விடுதி வசதி கிடையாது. இவளுக்காக அண்டை அயல் வட்டங்களில், ஒர் அறை அல்லது பகுதி வீடு (வாடகை) தேடி அவளுடன் நானும் அலைந்தேன். திருமணமாகாத இளைஞன் என்றால்கூட வாடகைக்கு இடம் கிடைத்துவிடும்; பெண்களுக்கு இடமே கிடைக்காது என்பதை அந்த அநுபவத்தில் தெரிந்துகொண்டேன். பிக்குப் பிடுங்கல் இல்லாத முதிய தம்பதிகூட இவ்வாறு தன்னந்தனியாகச் சம்பாதித்து வாழ வந்த பெண்ணுக்கு வீட்டில் ஒர் அறை வசதி செய்து கொடுக்க விரும்பவில்லை. ஒர் ஆணின் ஆதிக்கத்தில் இல்லாத திருமணமாகாத, பொருளாதார வசதியுடைய பெண் என்றால் அவள் ஒழுக்கம் நிச்சயமாகக் கண்களில் எண்ணெய் விட்டுக்கொண்டு கண்காணிப்பதற் குரியதென்று எல்லோரும் ஒட்டு மொத்தமாகக் கருதுவது ஏன்? அந்தப் பெண்ணுக்கு இருபது மைல்களுக்கப்பால் ஒர் உழைக்கும் மகளிர் விடுதியில் இடம் கிடைத்தது. அவளுக்குக் காலை எட்டு மணிக்குள் தன் பணியிடம் வரவேண்டும். ஏழு மணிக்கே கிளம்ப வேண்டும். அந்நேரம் அங்கு காலையுணவு தயாராகாது; மதிய உணவும் கொள்ள முடியாது. ஆனால், இந்த ஒரு நேர உணவுக்கான தொகையும் விடுதித் தொகையுடன் கொடுத்தே ஆக வேண்டும். இந்தச் சங்க